புதுப்பிக்கப்பட்ட 2019 மாருதி வேகன்ஆர் கார் தொடர்பான படங்கள் மற்றும் நுட்ப விபரங்கள் வெளியான நிலையில், தற்போது மாருதி சுஸூகி வேகன் ஆர் ஏஎம்டி வேரியன்ட் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
வரும் 23ந் தேதி சந்தையில் வெளியாக உள்ள மாருதி சுஸூகி வேகன்ஆர் காரில் 1.0 லிட்டர் மற்றும் 1.2 என இரண்டு பெட்ரோல் என்ஜின் தேர்வினை பெற்று வரவுள்ளது. இரண்டு என்ஜின் தேர்விலும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
மொத்தமாக 7 வேரியன்ட்களில் கிடைக்க உள்ளது. 1.0 லிட்டர் என்ஜின் தேர்வில் LXi, VXi மற்றும் VXi AGS போன்ற பேஸ் வேரியன்டில் மட்டும் கிடைக்க உள்ளது. 1.2 லிட்டர் என்ஜின் VXi , VXi AGS, ZXi மற்றும் ZXi AGS போன்ற வேரியன்டில் மட்டும் கிடைக்க உள்ளது.
புதிதாக K12M 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 91 பி.எஸ். மற்றும் 118 என்.எம். டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இதைத் தவிர K10B 1.0 லிட்டர் 67 bhp பவர் மற்றும் 90 NM டார்க் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் விற்பனை செய்யப்படுகின்ற மாருதி வேகன் ஆர் காரில் சிஎன்ஜி தேர்வு கூடுதலாக இணைக்கப்பட வாய்ப்புள்ளது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனலாக இடம்பெறுகின்றது.
மிக நேர்த்தியாக புதுப்பிக்கப்பட்ட முகப்பு தோற்றத்துடன் நீட்டிக்கப்பட்ட காரின் நீளம் மற்றும் வீல்பேஸ் ஆகியவற்றால் சிறப்பான இடவசதி கொண்டுள்ளது. காரின் இன்டிரியர் அமைப்பில் ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஏர்பேக், ஏபிஎஸ் மற்றும் இபிடி போன்றவை அடிப்படை அம்மாக இணைக்கப்பட உள்ளது.
image credit -youtube/autovikings
வருகின்ற ஜனவரி 23, 2019 யில் வெளியாக உள்ள மாருதி சுசுகி வேகன்ஆர் கார் விலை ரூ. 4.50 லடசத்தில் தொடங்கி ரூ. 6.80 லட்சத்திற்குள் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.