ஹோண்டா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற கார் மாடலான சிட்டி செடான் ரக மாடலின் ஐந்தாம் தலைமுறை கார் தாய்லாந்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் அடுத்த ஆண்டின் தொடக்க காலாண்டில் விற்பனைக்கு வெளியாக உள்ளது. முந்தைய மாடலை விட முற்றிலும் மேம்பட்டு விற்பனையில் உள்ள சிவிக் காரின் தோற்ற உந்துதலை தழுவியதாக அமைந்துள்ளது.
தற்போது கிடைக்கின்ற சிட்டி காரின் தோற்ற அமைப்பில் இருந்து முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டு மிக நேர்த்தியான வடிவமைப்புடன் முன்புறத்தில் மிக அகலமான க்ரோம் கிரில் வழங்கப்பட்டு எல்இடி ஹெட்லைட் உடன் எல்இடி ரன்னிங் விளக்குகளும் இணைக்கபட்டுள்ளது. பக்கவாட்டு தோற்ற அமைப்பில் பெரும்பாலும் தற்போது உள்ள மாடலின் தாக்கம் இடம்பெற்றிருக்கின்றது.
பின்புறத்தில் புதுப்பிக்கப்பட்ட பம்பருடன் செங்குத்தாக வழங்கப்பட்ட ரீஃபெலக்ட்ர் மற்றும் யூ வடிவத்தை நினைவுப்படுத்தும் எல்இடி டெயில் விளக்குகள் இணைக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ் டாப் வேரியண்டில் பிரீமியம் மற்றும் ஸ்போர்ட்டிவ் ஃபீனிஷ் வழங்கவ்வதற்கு கருப்பு நிற இன்ஷர்டுகள் இணைக்கப்பட்டுள்ளது.
2020 ஹோண்டா சிட்டி கார் இப்போது 100 மிமீ நீளம், அதே நேரத்தில் அகலம் 53 மிமீ அதிகரித்துள்ளது. இருப்பினும் உயரம் இப்போது ஒரு நல்ல 28 மிமீ வரை குறைக்கப்பட்டுள்ளது, ஒட்டுமொத்த காரின் நீளம் அதிகரித்த போதிலும், ஹோண்டா சிட்டி காரின் வீல் பேஸ் 11 மிமீ வரை குறைக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக, இன்டிரியர் அமைப்பினை பொறுத்தவரை விற்பனையில் உள்ள சிட்டியை விட முற்றிலும் மேம்பட்டு பல்வேறு நவீனத்துவமான ஸ்டைலிங் சார்ந்த அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளது. காரில் கருமை நிறத்துக்கும் முழுமையான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு சென்டரல் கன்சோலில் மிகவும் பெரிய தொடுதிரை அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ப்ளூடுத் கனெக்ட்டிவிட்டி ஆப்ஷன் ஏற்படுத்தப்பட்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதிகளுடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி அம்சங்களை வழங்கும் ஹோண்டா கனெக்ட்டிவிட்டி இன்ஃபோடெயின்மென்ட் பெற்றுள்ளது. குறிப்பாக தற்போது வழங்கப்பட்டு வந்த தொடுதல் திறன் பெற்ற ஏசி கன்டரோல் சுவிட்சுகள் மாற்றப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சிட்டி காரில் ஹோண்டா நிறுவனம் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை வழங்கியுள்ளது. 122 ஹெச்பி பவர் மற்றும் 173 என்எம் டார்க் வழங்குகின்றது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு, தாய்லாந்தின் சோதனைப்படி 23.8 கிமீ ஆக மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து, இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு i-MMD எனப்படுகின்ற மைல்டு ஹைபிரிட் டெக்னாலாஜி இணைக்கப்பட்டுள்ளது. புதிய ஹோண்டா சிட்டி தாய்லாந்தில் S, V, SV மற்றும் RS என நான்கு ட்ரிம்களில் வழங்கப்படும்.
இந்தியாவில் அடுத்த ஆண்டின் தொடக்க காலாண்டில் விற்பனைக்கு வெளியாக உள்ள புதிய சிட்டி காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன் பிஎஸ்-6 மாசு உமிழ்வுக்கு இணையாக கூடுதலாக இணைக்கப்படலாம். பாதுகாப்பு அமைபில், ஹோண்டா சிட்டியில் ஆறு ஏர்பேக்குகள் – இரட்டை முன், இரட்டை முன் பக்க மற்றும் இரட்டை கர்டெயின் ஏர்பேக்குகள், மல்டி ஆங்கிள் ரியர்-வியூ கேமரா, ஏபிஎஸ், ஈபிடி, வாகன நிலைப்புத்தன்மை கட்டுப்பாடு மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகியவற்றைப் பெறுகிறது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற மாருதி சுசுகி சியாஸ், ஹூண்டாய் வெர்னா மற்றும் வோக்ஸ்வேகன் வென்ட்டோ மற்றும் ரேபீட் கார்களை 2020 ஹோண்டா சிட்டி கார் எதிர்கொள்ள உள்ளது.