எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ZS EV எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் தோற்ற அமைப்பு மற்றும் வசதிகளில் எந்த மாற்றமும் இல்லாமல் ரேஞ்சு 419 கிமீ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பாக விற்பனையில் கிடைத்து வந்த மாடல் 340 கிமீ ரேஞ்சு கொண்டிருந்தது.

2020 மாடலின் வசதிகள் மற்றும் டிசைனில் எந்த மாற்றமும் இல்லாமல் இசட்எஸ் இவி காரில் 44.5 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக்குடன் கூடிய மின்சார மோட்டார் அதிகபட்சமாக 143 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 350 என்எம் டார்க் வழங்குவதுடன், அதிகபட்சமாக 419 கிமீ (iCAT சான்றிதழ்) தொலைவு பயணிக்கும் திறன் கொண்டதாக விளங்கும். 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 8.5 விநாடிகளை மட்டும் எடுத்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

16மிமீ வரை கிரவுண்ட் கிளியரண்ஸ் உயர்த்தப்பட்டு 177 மிமீ ஆக உள்ளது. எம்ஜி ஐஸ்மார்ட் EV 2.0 நுட்பத்தையும் இசட்எஸ் எலெக்ட்ரிக் பெற்ற இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை கொண்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு இணையம் சார்ந்த வசதிகளை ZS EV காரில் பெறுவதுடன் வை-ஃபை, டாம்டாம் மேப் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர இந்த காரில் கூடுதலாக எம்ஜி “EcoTree Challenge”  அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் ZS EV உரிமையாளர்கள் தங்களது CO2 சேமிப்பு மற்றும் தேசிய தரவரிசையை நிகழ் நேரத்தில் கண்காணிக்க முடியும்.

Variant Price
2021 MG ZS EV Excite ரூ. 20.99 லட்சம்
2021 MG ZS EV Exclusive ரூ. 24.18 லட்சம்

 

ZS EV உரிமையாளர்களுக்கு வாகனத்தில் 5 ஆண்டு / வரம்பற்ற கிமீ உற்பத்தியாளர் உத்தரவாதமும், லித்தியம் அயன் பேட்டரியில் 8 ஆண்டு / 1,50,000 கிமீ உத்தரவாதமும் இலவசமாக வழங்கப்படும். இஷீல்ட் 5 வருட காலத்திற்கு 24×7 சாலையோர உதவிகளையும் (ஆர்எஸ்ஏ) உள்ளடக்கியது.