ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம், பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு குஷாக் ஓனிக்ஸ் பிளஸ் மற்றும் ஸ்லாவியா ஆம்பிஷன் பிளஸ் வேரியண்டுகளை ரூ.11.59 லட்சம் முதல் ரூ.13.79 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
கவர்ச்சிகரமான புதிய வசதிகளை பெற்றுள்ள மாடலில் சிறப்பு கார்ப்ரேட் சலுகைகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வழங்கப்பட உள்ளது.
Skoda Kushaq Onyx Plus And Slavia Ambition Plus
பொதுவாக இரண்டு மாடலிலும் 1.0-லிட்டர், TSI பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக மோட்டார் 114 பிஎச்பி பவரையும், 178 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் ஆறு-வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டும் கிடைக்கின்றது.
முன் கிரில், கதவின் கீழ்ப்பகுதி மற்றும் டெயில்கேட்டில் க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்டு, இன்பில்ட் டேஷ் கேமரா வழங்கப்பட்டு ஸ்லாவியா ஆம்பியஷன் பிளஸ் அனைத்து நிறங்களிலும் கிடைக்கின்றது.
அடுத்து, குஷாக் ஓனிக்ஸ் பிளஸ் புதிய R16 க்ரஸ் உலோகக் கலவைகள் மற்றும் விண்டோ குரோம் அலங்காரம் ஆகியவற்றைக் கொண்டு முன்புற கிரில் ரிப்ஸ் மற்றும் பின்புறத்தில் உள்ள டிரங்க் அலங்காரம் இப்போது குரோமில் கொடுக்கப்பட்டு, கேண்டி ஒயிட் மற்றும் கார்பன் ஸ்டீல் நிறங்களில் கிடைக்கும்.
Kushaq Onyx Plus 1.0 TSI MT -₹ 11,59,000
Slavia Ambition Plus 1.0 TSI MT ₹ 12,49,000
Slavia Ambition Plus 1.0 TSI AT: ₹ 13,79,000