Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

2024 ஹூண்டாய் கிரெட்டாவின் இன்டிரியர் படங்கள் வெளியானது

By நிவின் கார்த்தி - Editor
Last updated: 11,January 2024
Share
SHARE

2024 new hyundai creta suv 1

ஹூண்டாய் நிறுவனம் புதிய கிரெட்டா எஸ்யூவி காரை 16 ஜனவரி 2024 ஆம் தேதி வெளியிட உள்ள நிலையில் டீலர்களுக்கு அனுப்ப துவங்கியுள்ளதால் பல்வேறு படங்கள் வெளியாகியுள்ளன. இந்த வகையில் இன்டிரியர் தொடர்பான படங்களும் கிடைத்துள்ளது.

இந்திய சந்தையில் 8 ஆண்டுகளாக கிரெட்டா எஸ்யூவி அமோக வரவேற்பினை பெற்று லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.

2024 Hyundai Creta interior

2024 ஆம் ஆண்டிற்கான கிரெட்டா மாடல் தொடர்பான இன்டிரியர் படங்களை அதிகார்ப்பூர்வமாக ஹூண்டாய் வெளியிட்டிருந்த பொழுதும் புதிய கார்கள் டீலர்களை வந்தடைந்துள்ளதை தொடர்ந்து சில படங்கள் கிடைத்துள்ளது.

புதுப்பிக்கப்பட்ட இன்டிரியரில் இரண்டு பிரிவுகளை கொண்ட 10.25 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெறுவதன் மூலம் 70க்கு மேற்பட்ட கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களுடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்டவற்றுடன் தொடும் வகையிலான HVAC சுவிட்சுகள் இடம்பெற்றுள்ளது.

செல்டோஸ் காரில் உள்ள வசதிகளுடன் போட்டியாக க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி காரில் இரட்டை மண்டல ஏசி கட்டுப்பாடு, பனோரமிக் சன்ரூஃப், 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், காற்றோட்டமான முன்பக்க இருக்கைகள் மற்றும் 8-வழி அட்ஜெஸ்ட் செய்யும் ஓட்டுநர் இருக்கை ஆகியவற்றைப் பெறும்.

new creta

2024 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி பாதுகாப்பு அம்சங்களில் ஆறு ஏர்பேக்குகள் உட்பட19 வசதிகளை பெற்ற லெவல் 2 ADAS பாதுகாப்பினை தொகுப்பு, 360 டிகிரி கேமரா, பிளைண்ட் ஸ்பாட் கண்காணிப்பு அமைப்பு, டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) ஆகியவை பெற்றிருக்கும்.

இந்த காரில்  E, EX, S, S(O), SX, SX Tech, மற்றும் SX(O) மொத்தமாக 7 விதமான வேரியண்ட் அடிப்படையில் 1.5 லிட்டர் Mpi பெட்ரோல், 160 hp பவர் வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் GDi டர்போ பெட்ரோல் மற்றும்  1.5 லிட்டர் U2 CRDi டீசல் என மூன்று விதமான ஆப்ஷனை கொண்டதாக வரவிருக்கின்றது.

new hyundai creta suv 1

new creta suv

image source – Deepak Binwal You tube

kwid cng
புதிய ரெனால்ட் க்விட் என்னென்ன மாற்றங்கள் பெறலாம்.?
இந்தியாவில் வின்ஃபாஸ்ட் மின்சார கார்கள் செப்டம்பர் 6ல் அறிமுகம்
நவீன வசதிகளுடன் வருமா., 2025 மஹிந்திரா தார் எதிர்பார்ப்புகள்.!
புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்
2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்
TAGGED:Hyundai Creta
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
ஹீரோ மேவ்ரிக் 440
Hero Motocorp
ஹீரோ மேவ்ரிக் 440 விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
2024 bajaj pulsar ns200 headlight
Bajaj
2024 பஜாஜ் பல்சர் NS200 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பு அம்சங்கள்
honda cb 125 hornet
Honda Bikes
ஹோண்டா CB 125 ஹார்னெட் ஆன்-ரோடு விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
New Hero Glamour X 125 on road price
Hero Motocorp
ஹீரோ கிளாமர் எக்ஸ் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறம் , சிறப்பம்சங்கள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms