• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

2024 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி முன்பதிவு துவங்கியது

by MR.Durai
2 January 2024, 1:23 pm
in Car News
0
ShareTweetSend

2023 hyundai creta suv bookings open

ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் புதிய கிரெட்டா எஸ்யூவி மாடலுக்கு ரூ.25,000 கட்டணமாக செலுத்தி முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. புதிய கிரெட்டா மூன்று விதமான என்ஜின் ஆப்ஷனை கொண்டதாக உள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட கிரெட்டா தற்பொழுது வரை 9.50 லட்சம் விற்பனை எண்ணிக்கையை கடந்துள்ளது.

2024 Hyundai Creta

கிரெட்டாவின் காரின் தோற்ற அமைப்பில் புதுப்பிக்கப்பட்டு கிரில் மற்றும் மிக நேர்த்தியான புதிய எல்இடி ரன்னிங் விளக்குடன் ஹெட்லைட் கொண்டதாக வந்துள்ளது.

115 hp பவர், 143.8 Nm டார்க் வழங்குகின்ற 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், அடுத்த என்ஜின் 116 hp பவர் மற்றும் 250 Nm டார்க் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜிடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இரு என்ஜினிலும் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் கிடைக்க உள்ளது.

கூடுதலாக, 1.5 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக குதிரைத்திறன் 160 bhp மற்றும் 253 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக DCT ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

புதுப்பிக்கப்பட்ட நிறத்தை பெற உள்ள டேஸ்போர்டில் சிறிய அளவிலான ஸ்டைலிங் மாற்றங்கள் மற்றும் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெறக்கூடும். இரண்டு பிரிவு திரை அமைப்பினை பெற்ற தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளுடன் வயர்லெஸ் சார்ஜிங், ஆட்டோமேட்டிக் ஏசி கண்ட்ரோல் ஆகியவற்றை பெற உள்ளது.

வாகனத்தின் ஸ்டெபிளிட்டி கண்டரோல், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல் ஆகியவற்றுடன் 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா வியூ, பிரீமியம் ஆடியோ சிஸ்டம் பெற உள்ள ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி காரில் ADAS பாதுகாப்பு தொகுப்பினை பெறுவது உறுதியாகியுள்ளது.

Tags: Hyundai Creta
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version