Categories: Car News

ஹூண்டாய் வெனியூ அட்வென்ச்சர் எடிசன் வெளியானது

2024 hyundai venue adventure edition front

பண்டிகை காலத்தை முன்னிட்டு ஹூண்டாய் நிறுவனம் பிரத்தியேக அட்வென்ச்சர் எடிசன் மாடலை வெனியூ காரில் ரூ.10.15 லட்சம் முதல் ரூ.13.38 லட்சம் வரையிலான விலையில் அறிமுகம் செய்துள்ளது.

2024 Hyundai Venue Adventure Edition

ரேஞ்சர் காக்கி நிறத்துடன் கருப்பு, வெள்ளை, கிரே என மூன்று ஒற்றை வண்ண நிறங்களுடன் கூடுதலாக டூயல் டோன் நிறங்களாக கருப்பு நிற மேற்குரையுடன் ரேஞ்சர் காக்கி, வெள்ளை மற்றும் கிரே என மொத்தமாக 7 நிறங்களுடன் S(O), SX , மற்றும் SX(O) என மூன்று விதமான வேரியண்டுகளில் கிடைக்கின்ற அட்வென்ச்சர் மாடல் இரண்டு பெட்ரோல் ஆப்ஷனிலும் கிடைக்கின்றது. 15,000 ரூபாய் கூடுதல் கட்டணத்தில் SX மற்றும் SX(O) டிரிம்களில் டூயல்-டோன் வண்ணங்களைத் தேர்வுசெய்யலாம்.

வெனியூ அட்வென்ச்சர் காரில் பல்வேறு இடங்களில் கருமை நிறத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக புதிய முன்புற கிரில் மத்தியில் கருமை நிற லோகோ உடன் அலாய் வீல் முன்புறம் மற்றும் பின்புறம் உள்ள ஸ்கிட் பிளேட் மேற்கூரை ரெயில்கள், விங்மிரர், ஆன்டனா உள்ளிட்டவற்றிலும் முன்புறத்தில் கருப்பு நிற பிரேக் கேலிப்பர் கொடுக்கப்பட்டு சிவப்பு நிறம் ஆனது சேர்க்கப்பட்டுள்ளது.

அட்வென்ச்சர் எடிஷன் குறிப்பிட்ட அப்ஹோல்ஸ்டரியுடன் சேஜ் க்ரீன் நிறத்துடன், டாஷ்போர்டு கேமராவில் இரண்டு கேமரா, புதிய 3டி பாய்கள் மற்றும் ஸ்போர்ட்டி தோற்றமளிக்கும் பெடல்கள் உள்ளன.

  • 1.2 MPi MT S(O)+ – ₹10.14 லட்சம்
  • 1.2 MPi MT SX – ₹11.21 லட்சம்
  • 1.0 turbo GDi DCT SX(O) – ₹13.38 லட்சம்

All prices ex-showroom

120 PS பவரை வெளிப்படுத்துகின்ற 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆனது
172 Nm டார்க் உற்பத்தி செய்கின்றது. இதில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக டிசிடி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

இந்த மாடல் 83hp, 114Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை பெற்ற வேரியண்டில் மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.