ஜப்பான் மொபைலிட்டி கண்காட்சியில் நாளை சுசூகி ஸ்விஃப்ட் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. இந்தியாவின் அதிகம் விற்பனையாகின்ற ஹேட்ச்பேக் கார்களில் ஸ்விஃப்ட் முதன்மை வகிக்கின்றது.
புதிய ஸ்விஃப்ட காரின் அடிப்படையான வடிவமைப்பில் சிறிய அளவிலான மேம்பாடுகள் பெற்று நவீனத்துவமான கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெற்று ADAS பாதுகாப்பு தொகுப்பினை கொண்டிருக்கலாம்.
2024 Maruti Suzuki Swift
சில வாரங்களுக்கு முன்பாக புதிய சுசூகி ஸ்விஃப்ட் காரின் மாதிரி படங்களின் அடிப்படையில் மிக நேர்த்தியான அறுகோண வடிவத்திலான கிரில், புதிய முன் மற்றும் பின்புற பம்பர் மற்றும் L வடிவ ரன்னிங் விளக்குடன் கூடிய புரொஜெக்டர் ஹெட்லேம்ப் பெற்றதாக அமைந்துள்ளது.
பக்கவாட்டில் புதுப்பிக்கப்பட்ட டூயல் டோன் அலாய் வீல், கருப்பு நிற கொண்ட ORVM, மேற்கூறை, மற்றும் சி-பில்லரில் கொண்டுள்ளது. பின்புறத்தில் புதிய சி-வடிவ எல்இடி டெயில் லைட் புதிய பின்புற பம்பர் பெற்றுள்ளது. இன்டிரியரில் சில குறிப்பிடதக்க மாற்றங்களை கொண்டு நேர்த்தியான தொடுதிரை அமைப்புடன் கூடிய டிஸ்பிளே பெற்றதாக அமைந்திருக்கலாம்.
இந்திய சந்தையில் தொடர்ந்து 1.2 லிட்டர் VVT டூயல் ஜெட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு ஹைபிரிட் ஆப்ஷனுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதியை பெற்றிருக்கும். ADAS பாதுகாப்பு தொகுப்பினை பெற வாய்ப்புள்ளதால், இந்திய சந்தைக்கு மாருதி கொண்டு வரும் வாய்ப்புகள் குறைவு தான்.
இந்தியாவில் 2024 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் புதிய மாருதி சுசூகி ஸ்விஃப்ட் விற்பனைக்கு வரக்கூடும். ஜப்பான் மோட்டார் ஷோவில் மாருதியின் முதல் eVX எலக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் காட்சிப்படுத்தப்பட உள்ளது.