புதிய 1.2 லிட்டர் Z12E மூன்று சிலிண்டர் எஞ்சினை அடிப்படையாகக் கொண்டு 32.85Km/Kg மைலேஜ் வழங்குகின்ற 2024 மாருதி சுசூகி ஸ்விஃப்ட் விற்பனைக்கு ரூ.8.19 லட்சம் முதல் ரூ.9.19 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் விலை) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மாருதியின் 14வது சிஎன்ஜி மாடலாக விளங்குகின்ற ஸ்விஃபடில் VXi, VXi (O) மற்றும் ZXi என மூன்று விதமான வேரியண்டுகளில் மட்டும் கிடைக்கிறது.
1.2-லிட்டர், மூன்று சிலிண்டர், NA பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 80bhp மற்றும் 112Nm டார்க் வழங்கும் நிலையில், CNG பயன்முறையில், பவர் 69bhp மற்றும் 102Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் ஐந்து ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்படும்.
மிக முக்கியமாக குறிப்பிடத்தக்க அம்சம், ஸ்விஃப்ட் சிஎன்ஜி மைலேஜ் ஒரு கிலோ சிஎன்ஜி எரிபொருளுக்கு 32.85 கிமீ வழங்கும் என கூறப்படுகிறது. முந்தைய ஸ்விஃப்ட் மாடலை விட ஆறு சதவீதம் அதிகமாகும்.
டாப் ZXi வேரியண்டில் எல்இடி புராஜெக்டர் ஹெட்லேம்ப் பகல்நேர ரன்னிங் விளக்குகள் 15-இன்ச் அலாய் வீல், வயர்லெஸ் சார்ஜிங், ரியர் வைப்பருடன் வாஷர் மற்றும் தானியங்கி காலநிலை கட்டுப்பாடு உள்ளது.
12 அக்டோபர் 2024 முதல் முதற்கட்டமாக குஜராத் மாநிலத்தில் டெலிவரி துவங்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, ஹரியானா, உத்திரப் பிரதேஷ் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களிலும் அதனை தொடர்ந்து தமிழ்நாடு, ராஜாஸ்தான், கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகியவற்றில் கிடைக்க உள்ளது.
(Ex-showroom)