Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

நவம்பர் 11.., புதிய டிசையரை விற்பனைக்கு வெளியிடும் மாருதி சுசூகி

by நிவின் கார்த்தி
26 October 2024, 6:23 am
in Car News
0
ShareTweetSend

2024 maruti Suzuki dzire leaked

வரும் நவம்பர் மாதம் 11ஆம் தேதி இந்தியாவின் பிரபலமான செடான் ரக மாடலாக அறியப்படுகின்ற மாருதி சுசூகி நிறுவனத்தின் டிசையர் கார் விற்பனைக்கு வெளியாக உள்ளது. புதிய ஸ்விஃப்ட் அடிப்படையில் பல்வேறு பாகங்களை பெற்றுள்ள இந்த மாடல் ஸ்விஃப்ட்டிலிருந்து வேறுபட்ட டிசைன் வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்பது உறுதியாகி உள்ளது.

எப்பொழுதும், மாருதி சுசூகி நிறுவனம் ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் என இரண்டையும் ஒன்றைப் போலவே வடிவமைப்பினை கொண்டிருக்கும். ஆனால், இந்த முறை இரு மாடல்களுக்கும் வித்தியாசத்தை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைத்திருக்கின்றது.

ஏற்கனவே டிசையர் படங்கள் ஆனது கசிந்து இருந்த நிலையில் குறிப்பாக முன்புற தோற்ற அமைப்பில் கிரில் மற்றும் பம்பர் போன்றவற்றில் சிறிய அளவிலான மாறுதல்கள் ஆனது மிகவும் வித்தியாசத்தை தருகின்றது.

சன்ரூஃப் மற்றும் மிகவும் தாராளமான இடவசதி வழங்குவதுடன் அதே நேரத்தில் பூட் ஸ்பேஸ் ஆனது சிறப்பாக அமைந்திருக்கும். இன்டீரியரில் ஸ்விஃப்ட் காரில் இருந்து பெறப்பட்ட பல்வேறு அம்சங்கள் மற்றும் டாஷ் போர்டு உள்ளிட்ட அனைத்திலும் தற்பொழுது உள்ள மாடலை போலவே அமைந்திருக்கும். பல்வேறு முக்கிய வசதிகளில் எல்இடி புராஜெக்டர் ஹெட்லேம்ப் பகல்நேர ரன்னிங் விளக்குகள் 15-இன்ச் அலாய் வீல், வயர்லெஸ் சார்ஜிங், ரியர் வைப்பருடன் வாஷர் மற்றும் தானியங்கி காலநிலை கட்டுப்பாடு வழங்கப்படும்.

என்ஜின் ஆப்ஷனில் புதிய 1.2 லிட்டர் Z12E மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பவர் அதிகபட்சமாக 81.6 PS மற்றும் 112 Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் 5 வேக  மேனுவல் மற்றும் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. கூடுதலாக சிஎன்ஜி ஆப்ஷனில் பவர் 69bhp மற்றும் 102Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் ஐந்து ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்படும்.

பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் அடிப்படையாகவே 6 ஏர்பேக்குகள் பெற்று மூன்று-புள்ளி இருக்கை பெல்ட், சீட் பெல்ட் ரிமைன்டர், ESP, ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் ABS உடன் EBD ஆகிய வசதிகளை கொண்டிருக்கும். கூடுதலாக ADAS பாதுகாப்பு தொகுப்பினை பெறக்கூடும்.

ரூபாய் 7 லட்சம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற புதிய டிசையர் காருக்கு போட்டியாக ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் ஆரா, டாடா டீகோர் சந்தையில் கிடைக்க உள்ளது.

 

Related Motor News

செப்டம்பர் 2025ல் இந்தியாவின் டாப் 10 கார்கள்.., முதலிடத்தில் நெக்ஸான்.!

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1.30 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு.!

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

ரூ.10.50 லட்சம் முதல் புதிய மாருதி சுசூகி விக்டோரிஸ் விற்பனைக்கு வெளியானது

BNCAP-ல் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற 2025 மாருதி சுசூகி டிசையர்

மாருதி சுசூகியின் 2025 டிசையர் டூர் S விற்பனைக்கு வெளியானது

Tags: Maruti SuzukiMaruti Suzuki Dzire
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

Toyota century coupe

உலகின் ஆடம்பர கார்களில் மற்றொரு அடையாளம் ”டொயோட்டா செஞ்சூரி”

tata sierra

நவம்பர் 25ல் மீண்டும் டாடா Sierra எஸ்யூவி சந்தைக்கு வருகின்றது.!

சிஎன்ஜி ஆப்ஷனில் வெளியான கியா காரன்ஸ் எம்பிவி சிறப்புகள்.!

வெனியூ காரில் ADAS சார்ந்த பாதுகாப்பினை உறுதி செய்த ஹூண்டாய்

ஹூண்டாய் புதிய வெனியூ எஸ்யூவி அறிமுகத்துடன் முன்பதிவு துவங்கியது

டாடா சியரா எஸ்யூவி அறிமுகத்திற்கு முன்பாக தெரிய வேண்டியவை.!

காரன்ஸ் கிளாவிஸ் EVல் புதிய வேரியண்டுகளை வெளியிட்ட கியா

சிறப்பு டொயோட்டா ஹைரைடர் ஏரோ எடிசன் வெளியானது

மேக்னைட்டில் கூடுதலாக ஏஎம்டி ஆப்ஷனிலும் சிஎன்ஜி வெளியிட்ட நிசான்

ADAS பாதுகாப்பினை பெற்ற டாடா நெக்ஸான் விற்பனைக்கு வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan