6 ஆண்டுகளில் சுமார் 2 லட்சம் விற்பனை இலக்கை கடந்துள்ள நிலையில் இதனை கொண்டாடும் வகையில் பிரெஸ்டீஜ் எடிசன் என்ற பெயரில் டீலர் அளவிலான கூடுதலான ஆக்செரீஸ் வழங்கப்படுகின்றது.
Toyota Glanza Prestige Package
- பிரீமியம் கதவு விசர்கள்
- குரோம் மற்றும் கருப்பு நிற கார்னிஷ் கூடிய உடல் பக்க மோல்டிங்
- பின்புற விளக்கு கார்னிஷ்
- ORVMகள் மற்றும் ஃபெண்டர்களுக்கான குரோம் கார்னிஷ்
- பின்புற ஸ்கிட் பிளேட்
- ஒளிரும் கதவு சில்ஸ்
- கீழ் கிரில் கார்னிஷ்
இந்த சிறப்பு ஆக்செரீஸ் கொண்ட எடிசன் ஜூலை 31, 2025 வரை மட்டுமே கிடைக்கும்.
கிளான்ஸாவில் 90 hp பவர் மற்றும் 113 NM டார்க் புதிய 1.2 லிட்டர் என்ஜின் பெற்ற K சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கின்ற நிலையில் மைலேஜ் 22.35 km/l (MT), 22.94 km/l(AMT) வெளிப்படுத்துகின்றது.
கூடுதலாக 77hp பவர் மற்றும் 98.5 NM டார்க் புதிய 1.2 லிட்டர் என்ஜின் பெட்ரோல் சிஎன்ஜி எஞ்சின் மைலேஜ் 30.61 km/kg ஆக உள்ளது.
9-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹெட்-அப் டிஸ்ப்ளே (HUD), 360-டிகிரி கேமரா மற்றும் 45+ இணைக்கப்பட்ட அம்சங்களுடன் டொயோட்டா ஐ-கனெக்ட் வசதிகளும் உள்ளது.
2025 Toyota Glanza price list
Variant | Price |
---|---|
Glanza E MT | Rs. 6,90,000 |
Glanza S MT | Rs. 7,79,000 |
Glanza S AMT | Rs. 8,34,000 |
Glanza G MT | Rs. 8,82,000 |
Glanza G AMT | Rs. 9,37,000 |
Glanza V MT | Rs. 9,82,000 |
Glanza V AMT | Rs. 9,99,900 |
Glanza S CNG MT | Rs. 8,69,900 |
Glanza G CNG MT | Rs. 9,72,900 |
கிளான்ஸ்வுக்கு 3 ஆண்டுகள் அல்லது 100,000 கிமீ உத்தரவாதம், 5 ஆண்டுகள் அல்லது 220,000 கிமீ வரை நீட்டிக்கலாம். மேலும், டொயோட்டாவின் 60 நிமிட எக்ஸ்பிரஸ் பராமரிப்பு சேவை, 24 மணி நேர சாலையோர உதவி ஆகியவற்றை புதிய வாடிக்கையாளர்கள் பெறுவார்கள்.