
இந்தியாவின் பிரசத்தி பெற்ற காம்பேக்ட் எஸ்யூவிகளில் ஒன்றான மாருதியின் பிரெஸ்ஸா 2026 மாடலில் பல்வேறு முக்கிய டிசைன் மாற்றங்களுடன் குறிப்பாக, இரண்டாம் தலைமுறை பிரெஸ்ஸா அறிமுகமான நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கப்பட்டுள்ள இந்த பெரிய அப்டேட்டில், புதிய டர்போ-பெட்ரோல் இன்ஜின், புதிய கியர்பாக்ஸ் மற்றும் பூட் ஸ்பேஸை அதிகரிக்கும் அண்டர்பாடி சிஎன்ஜி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
வெளிப்புற தோற்றத்தில் புதிய ஃபோக் லேம்ப் டிசைனுடன் கிரில்லில் கோல்டு இன்சர்ட்டுகள் மற்றும் புதிய அலாய் வீல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மிக முக்கியமான மாற்றமாக, ஃபிரான்ஸ் மாடலை விட அதிக சக்திவாய்ந்த 108 bhp பவர் மற்றும் 170 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0-லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ இன்ஜின் மற்றும் புதிய 6-ஸ்பீட் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
பழைய 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸிற்குப் பதிலாக, 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அனைத்து மாடல்களிலும் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. அதே சமயம், 1.5 பெட்ரோல் இன்ஜினில் மட்டும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸும் கிடைக்கிறது.
மைலேஜை பொறுத்தவரை, புதிய பிரெஸ்ஸா கார் முந்தைய மாடலை விட மேம்படுத்தப்பட்டு1.5 பெட்ரோல் இன்ஜின் இப்போது மேனுவல் மாடலில் லிட்டருக்கு 21.09 கிமீ வரையிலும், ஆட்டோமேட்டிக் வேரியண்ட் லிட்டருக்கு 20.17 கிமீ வரையிலும், சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 26.90 கிமீ மைலேஜ் தருவதாகவும், டர்போ பெட்ரோல் இன்ஜின் லிட்டருக்கு 2047 கி.மீ வரை மைலேஜ் தரக்கூடும் என ARAI குறிப்பிடுகிறது.
கேபினுக்குள் 10.1-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வென்டிலேட்டட் ஃபிரன்ட் சீட்கள், ஏர் பியூரிஃபையர் மற்றும் ஆம்பியன்ட் லைட்டிங் போன்ற பிரீமியம் வசதிகள் இடம்பெற்றுள்ளன
கூடுதல் அம்சங்களில் ஆக்டிவ் கூலிங்குடன் கூடிய வயர்லெஸ் சார்ஜிங் பேட், எலக்ட்ரிக் சன்ரூஃப், புதிய HVAC கட்டுப்பாடு மற்றும் புதிய இரண்டாம் வரிசை ஹெட்ரெஸ்ட்கள் ஆகியவை அடங்கும். 360° கேமராக்கள் மற்றும் ஓட்டுநர் இருக்கை உயர சரிசெய்தல் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
2026 சுசூகி பிரெஸ்ஸாவில் ஸ்ப்ளெண்டிட் சில்வர், சிஸ்லிங் ரெட், பேர்ல் ஆர்க்டிக் ஒயிட், மாக்மா கிரே, ப்ளூயிஷ் பிளாக், விவேஷியஸ் ஆரஞ்சு, லஸ்ட்ரஸ் பேஜ் போன்ற நிறங்களுடன் டூயல் டோன் ஆப்ஷனில் கருப்பு நிற கூறையுடன் லஸ்ட்ரஸ் பேஜ், சிஸ்லிங் ரெட், மற்றும் பேர்ல் ஆர்க்டிக் ஒயிட் என மூன்று நிறங்களை பெற்றுள்ளது.