
எம்ஜி மோட்டாரின் முதல் மாடலாக இந்தியாவில் வெளியிடப்பட்ட ஹெக்டரின் புதுப்பிக்கப்பட்ட மாடல் பல்வேறு மாறுதல்களுடன் கூடுதலான வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட இணையம் சார்ந்த அம்சங்களும் பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வரும் டிசம்பர் 15, 2025 அன்று இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
MG Hector SUV teased
புதிய ஹெக்டரின் மிக முக்கியமான மாற்றம் என்னவென்றால் முன்பக்கம் உள்ள ‘கிரில்’ பகுதி முழுமையாக மாற்றியமைக்கப்பட்டு, குரோம் பூச்சுடன் மிகவும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. வாகனத்திற்கு ஒரு பிரீமியம் தோற்றத்தைக் கொடுப்பதுடன் முன்பக்க பம்பர், 19-அங்குல அலாய் சக்கரங்கள் ஆகியவை வாகனத்தின் தோற்றத்தை மிகவும் கம்பீரமாக வாகனத்தின் ஒட்டுமொத்த வடிவத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது.
ஹெக்டர் எஸ்யூவி மாடலிலும் அதே 14 அங்குல திரை தொடருவதுடன் அதன் வேகம் மற்றும் செயல்பாடு முன்பை விட பன்மடங்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, சைகை மூலமே ஏசி மற்றும் பாடல்களைக் கட்டுப்படுத்தும் வசதி இதில் சேர்க்கப்படலாம் இதுதவிர, இருக்கைகளில் காற்றோட்ட வசதி கொண்டிருக்கலாம்.
அதே நம்பகமான 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் தொடர்ந்து வழங்கப்படக்கூடும், இந்த மாடலுக்கு போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூவி 700 மற்றும் டாடா ஹாரியர் உட்பட அல்கசார், கிராண்ட் விட்டாரா உள்ளிட்ட பல்வேறு மாடல்களை எதிர்கொள்ளுகின்றது.

