பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் Neue Klasse பிரிவில் உருவாக்கப்பட்ட முதல் மாடலாக iX3 எலக்ட்ரிக் இரண்டாம் தலைமுறை மாடல் அதிநவீன அம்சங்களுடன் முழுமையான சார்ஜில் அதிகபட்சமாக 805 கிமீ ரேஞ்ச் என WLTP சான்றிதழ் பெற்றுள்ளது.
Neue Klasse (new class) எனப்படுகின்ற புதிய டிசைன் பிரிவின் அடிப்படையிலான வடிவமைப்பினை கொண்ட ஐஎக்ஸ்3 காரினை ஸ்போர்ட்ஸ் ஏக்டிவ்ட்டி வெய்கிள் (Sports Activity Vehicle – SAV ) என இநிறுவனத்தால் அழைக்கப்படுகின்றது.
பிஎம்டபிள்யூ iX3 பேட்டரி, ரேஞ்ச் விபரம்
iX3 50 xDrive என்ற வேரியண்ட் முதற்கட்டமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் 800V சார்ஜிங் ஆர்க்கிடெச்சர் ஆதரவினை பெற்ற 108.7kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு, டூயல் மோட்டார் செட்டப் பெற்ற ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் கிடைக்கின்ற இந்த வேரியண்டின் மோட்டார் 6வது தலைமுறை eDrive நுட்பத்தை பயன்படுத்தியுள்ள நிலையில் பவர் 469hp மற்றும் 645Nm டார்க் வழங்குவதுடன், 0-100kmph வேகத்தை 4.9 வினாடிகள் எடுத்துக்கொள்கிற நிலையில் அதிகபட்ச வேகம் மணிக்கு 210km ஆகும்.
முழுமையான சிங்கிள் சார்ஜில் 679-805 கிமீ வழங்கும் என WLTP சான்றிதழ் பெற்றுள்ளது.
கூடுதலாக இந்த மாடல் 400kW வரை DC வேகமான சார்ஜிங்கை ஆதரிப்பதனால் வெறும் 10 நிமிடங்களில் 372 கிமீ தொலைவை கடக்க சார்ஜிங் பெறுவதுடன், 21 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜிங் ஆகிவிடும். AC சார்ஜிங் முறையில் ஸ்டாண்டர்டாக 11kW அல்லது 22kW-ல் சார்ஜ் செய்ய முடியும்.
இந்த காரில் Vehicle-to-Load (V2L) என்ற முறையில் பவர் எடுத்துக் கொள்வதுடன், Vehicle-to-Home (V2H) முறையில் வீட்டு பயன்பாட்டிற்கு பவரை எடுத்துக் கொள்வதுடன், இறுதியாக பவரை விற்பனை செய்யும் வகையில் Vehicle-to-Grid (V2G) வசதியும் உள்ளது.
ஐஎக்ஸ்3 டிசைன் மற்றும் வசதிகள்
பிஎம்டபிள்யூ நிறுவன iX3 காரில் அதி நவீன பாதுகாப்பு சார்ந்த அம்சங்களுடன் சூப்பர் பிரெயின் ஆட்டோமேட்டேட் ADAS பெறுவதுடன் முகப்பில் புதிய நியூ கிளாஸ் கிட்னி கிரில் ஒளிரும் வகையில், கொடுக்கப்பட்டு எல்இடி ஹெட்லைட் வசதியுடன் 20-இன்ச் லைட்-அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது, வாடிக்கையாளர்கள் விருப்பமாக கிடைக்கும் புதிய லைட்-அலாய் வீல்களின் (20-, 21- மற்றும் 22-இன்ச்) பிரத்யேக தேர்வையும் பெறலாம்.
iX3 பரிமாணங்களில் 4,782mm (நீளம்), 1,895mm (அகலம்) மற்றும் 1,635mm (உயரம்) ஆக உள்ள நிலையில் நவீன ஏரோடைனமிக்ஸ் சார்ந்த 0.24Cd இழுவை குணகத்தை பெற்றுள்ளது.
இன்டீரியரில் 5 இருக்கைகளை பெற்ற இந்த காரில் BMW’s Operating System X பெற்ற 17.9 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்று பனரோமிக் வின்ட்ஷீல்டு கொண்டு தெளிவான காட்சியை வழங்குகின்றது.
முதற்கட்டமாக செப்டம்பர் அல்லது அக்டோபரில் உற்பத்தி ஹங்கேரியில் உள்ள புதிய ஆலையில் தயாரிக்கப்பட உள்ள ஐஎக்ஸ்3 தொடர்ந்து ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 2026 முதல் கிடைக்க உள்ள நிலையில், கூடுதல் வேரியண்டுகள் மற்றும் மற்ற நாடுகளுக்கு படிப்படியாக விரிவுப்படுத்த பிஎம்டபிள்யூ குழுமம் திட்டமிட்டுள்ளது.