MG Comet EV காரை பற்றி 5 முக்கிய அம்சங்கள்

எம்ஜி மோட்டார் நிறுவனம் குறைந்த விலையில் கோமெட் எலக்ட்ரிக் கார் மாடலை 230 கிமீ ரேஞ்சு கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 26 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ள நிலையில் அனைத்து முக்கிய விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

2023 MG Comet EV

இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கோமெட் எலக்ட்ரிக் காரின் அனைத்து முக்கிய விபரம் நுட்பங்களை முதன்முறையாக நாம் வெளியிட்டிருந்தோம். டிகோர்.ev டியாகோ.ev மற்றும் eC3 கார்களை எதிர்கொள்ள உள்ளது.

கோமெட் EV டிசைன்

சிறிய மைக்ரோ கார் போன்ற ஹேட்ச்பேக் கார்களை போல GSEV (Global Small Electric Vehicle) பிளாட்ஃபாரத்தில் பாக்ஸ் வடிவமைக்கப்பட்ட காமெட் காரில் கதவுகளின் எண்ணிக்கை 3 பெற்று இருக்கை அளவு 4 மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் பூட் ஸ்பேஸ் கொடுக்கப்படவில்லை. மற்றபடி, பின்புற இருக்கைகளை மடக்கும் பொழுது சற்று இடவசதி கிடைக்கின்றது.

கோமெட் எலக்ட்ரிக் காரின் பரிமாணங்கள் 2974mm நீளம், 1505mm அகலம், 1640mm உயரம் மற்றும் 2010mm வீல்பேஸ் கொண்டுள்ளது. டர்னிங் ஆரம் வெறும் 4.2 மீ ஆக உள்ளதால் நெரிசல் மிகுந்த பரபரப்பான சாலைகள் மற்றும் குறுகலான சாலைகளிலும் வாகனத்தை ஓட்டுவதற்கு இலகுவாக இருக்கும்.

பாடி கிராபிக்ஸ் ஸ்டிக்கரிங் அம்சங்களுடன் டூயல் டோன் நிறங்களில் பச்சை நிறத்துடன் கருப்பு நிற கூறை, வெள்ளை நிறத்தில் கருப்பு நிற கூறை, சிங்கிள் டோனில் வெள்ளை, கருப்பு மற்றும் சில்வர் என மூன்று நிறங்கள் கிடைக்க உள்ளது.

எல்இடி ஹெட்லேம்ப் கொடுக்கப்பட்டு ஒளிரும் வகையில் MG லோகோ நடுவில் பொருத்தப்பட்டிருக்கும். எம்ஜி லோகோவிற்கு கீழே சார்ஜிங் சாக்கெட் பொருத்தப்பட்டு, கிடைமட்ட எல்இடி லைட் ஸ்டிரிப்க்கு கொண்டுள்ளது. அதன் கீழே ஒரு குரோம் டிரிம் அகலத்தில் இயங்கி விங் மிரர் உடன் இணைக்கிறது.

டயர் அளவு 145/70 மற்றும் 12 அங்குல ஸ்டீல் வீலுடன் டூயல்-டோன் வீல் கவர், முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்புறம் டிரம் பிரேக், டெயில்கேட்டின் விளிம்பில் பொருத்தப்பட்ட எல்இடி டெயில் விளக்கு மற்றும் பின்புறத்தில் எல்இடி லைட் ஸ்ட்ரிப் கொடுக்கப்பட்டுள்ளது.

கோமெட் EV இன்டிரியர்

காமெட் இவி காரில் டூயல் பிரிவுகளை பெற்ற 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு உட்புறத்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் கிரே நிறத்திலான இன்டிரியர் ஆப்பிள் ஐபாட் தோற்ற அமைப்பில் கன்ட்ரோல் சுவிட்சுகள் வழங்கப்பட்டு லேதர் சுற்றுப்பட்ட இரண்டு ஸ்போக் ஸ்டீயரிங் வீல் பெற்றுள்ளது.

நான்கு இருக்கைகள் கொண்ட இந்த காரில் அம்சங்களைப் பொறுத்தவரை, கனெக்டேட் கார் i-smart டெக், எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே, அதிகபட்ச வேகம் 30 முதல் 80 கிமீ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் அமைக்கலாம்,  ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட், கீலெஸ் என்ட்ரி அண்ட் கோ, டிரைவ் மோடுகள் மற்றும் குரல் கட்டளைகளை எதிர்பார்க்கலாம்.

கோமெட் இவி காரில் 2 ஸ்பீக்கர்கள் புளூடூத் இசை & காலிங் ஸ்டீயரிங் மவுண்டட் ஆடியோ, i-smart மூலம் 55க்கு மேற்பட்ட வசதிகளை எம்ஜி நிறுவனம் வழங்குகின்றது. அவற்றில், டிஜிட்டல் முறையில் இருவர் வாகனத்தின் கீ பகர்ந்து கொள்ளலாம், ரிமோட் கார் லாக்/அன்லாக், ஃபைண்ட் மை கார், ஸ்டேட்டஸ் செக் ஆன் ஆப், ஸ்டார்ட் அலாரம், ஜியோ-ஃபென்ஸ், தனிப்பயனாக்கக்கூடிய வேக வரம்புடன் கூடிய வாகன அதிவேக எச்சரிக்கை, ஸ்மார்ட் டிரைவ் தகவல், சார்ஜிங் ஸ்டேஷன் தேடல், OTA மேம்பாடு, ஐ-ஸ்மார்ட் பயன்பாட்டில் 100% சார்ஜிங் அறிவிப்பு ஆகிய வசதிகள் உள்ளன.

கோமெட் EV பவர்டிரெயின்

MG Comet EV காரின் பவர் 42 PS மற்றும் 110 Nm டார்க் வெளிப்படுத்தும் 17.3 kWh பேட்டரி பேக் பெற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், கூடுதல் ரேஞ்சு வழங்கும் மாடல் சற்று தாமதமாக அறிமுகம் செய்யப்படலாம்.

3.3 kW சார்ஜர் வாயிலாக 10 முதல் 80% சார்ஜ் பெற 5 மணிநேரமும், 0 முதல் 100% சார்ஜ் பெற 7 மணிநேரமும்  தேவைப்படும். முழுமையான சிங்கிள் சார்ஜில் 230 கிமீ தொலைவு பயணிக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.

மற்ற பாதுகாப்பு வசதிகளில், IP67 பேட்டரி பேக், டூயல் ஏர்பேக், ABS + EBD,  ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, பின்புற பார்க்கிங் சென்சார், ஃபாலோ மீ ஹெட்லேம்ப், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், முன் மற்றும் பின்புற இருக்கை பெல்ட் நினைவூட்டல், டிரைவர் & கோ-டிரைவர் சீட் லோட் லிமிட்டர் போன்றவை உள்ளன.

Specifications MG Comet EV
டிரைவிங் ரேஞ்சு 230 கிமீ
அதிகபட்ச வேகம் 100 km/h
பேட்டரி திறன் 17.3 kWh
மோட்டார் பவர் 42 hp
டார்க் 110 Nm
சார்ஜிங் நேரம் 0-100 % 7 மணி நேரம்

10-80% 5 மணி நேரம்

Dimensions (L x W x H) 2,974 mm x 1,505 mm x 1,640 mm
Wheelbase 2010 mm
கெர்ப் எடை 815 kg
இருக்கை அளவு 4

கோமெட் EV போட்டியாளர்கள்

இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள டிகோர்.ev டியாகோ.ev மற்றும் சிட்ரோன் eC3 கார்களை எதிர்கொள்ள உள்ள புதிய எம்ஜி கோமெட் எலக்ட்ரிக் கார் வரவுள்ளது.

கோமெட் EV விலை

வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி கோமெட் எலக்ட்ரிக் கார் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க எம்ஜி மோட்டார் உறுதிப்படுத்தியுள்ளது. காரின் விலை ₹ 7.98 லட்சம் முதல் ₹ 9.98 லட்சம் வரை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எம்ஜி காமெட் எலக்ட்ரிக் கார் ரேஞ்சு ?

MG Comet EV காரின் பவர் 42 PS மற்றும் 110 Nm டார்க் வெளிப்படுத்தும் 17.3 kWh பேட்டரி பேக் உள்ளதால் 230 கிமீ ரேஞ்சு கிடைக்கும்.

எம்ஜி காமெட் EV விலை எவ்வளவு ?

எம்ஜி காமெட் EV விலை ₹ 7.98 லட்சம் முதல் ₹ 9.98 லட்சம் வரை ஆகும்.

MG Comet EV Gallery

This post was last modified on May 5, 2023 9:53 AM

Share
Tags: MG Comet EV