• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

by MR.Durai
24 July 2026, 7:16 am
in Car News
0
ShareTweetSend

கியா நிறுவனத்தின் பாக்ஸி ஸ்டைல் புதிய ‘சிரோஸ் EV’ மாடல் எக்ஸ்-ஷோரூம் விலையில் ₹13.49 லட்சம் முதல் ₹ 19.99 லட்சம் வரையில் அறிமுகமாகியுள்ள இந்த கார், வாடிக்கையாளர்களுக்கு வசதியாக ‘பேட்டரி வாடகை திட்டம்’ (BaaS) சந்தா முறையிலும் கிடைக்கிறது. BaaS திட்டத்தின் மூலம் காரின் ஆரம்ப விலை வெறும் ரூ. 7.99 லட்சத்தில் இருந்து தொடங்குவதுடன், பயணிக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ₹ 3.3 மட்டுமே கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

ஏறக்குறைய விற்பனையில் உள்ள ICE ரக மாடலின் அடிப்படையை பெற்றுள்ள இவி காரில் சிறிய அளவிலான டிசைன் மாற்றங்களை மட்டுமே கொண்ட இந்த கார் 42 kWh மற்றும் 51.4 kWh என இரு பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

இதில் 42 kWh பேட்டரி மாடல் 443 கிமீ ரேஞ்சும், பெரிய 51.4 kWh பேட்டரி மாடல் தனது பிரிவிலேயே அதிகபட்சமாக 526 கிமீ ரேஞ்சும் வழங்கும் திறன் கொண்டது. இதன் பிரத்யேக எலக்ட்ரிக் மோட்டார் 171 hp பவரையும் 255 Nm டார்க்கையும் வெளிப்படுத்தி, வெறும் 8.1 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ வேகத்தை எட்டிப்பிடிக்கிறது. மேலும் 100kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைப் பயன்படுத்தி, 10% முதல் 80% வரை வெறும் 39 நிமிடங்களில் மிக வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

அவசர கால பிரேக்கிங், லேன் கீப் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் போன்ற பாதுகாப்பான டிரைவிங் உதவிகளுடன் 6 ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமரா, ESP, மற்றும் அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் உள்ளது.

மிக முக்கியமாக இந்த சிரோஸ் இவிக்கு ஆயுட்கால பேட்டரி வாரண்டி (Lifetime Battery Warranty) உள்ளதால் முதல் உரிமையாளர்களுக்கு உயர் மின்னழுத்த (High-Voltage) பேட்டரிக்கு ஆயுட்கால உத்தரவாதத்தை அதாவது 15 ஆண்டுகள் வரை கியா வழங்குகிறது.

Kia Syros EV ex-showroom price list

42 kWh Battery Pack

  • HTK – Rs 13,49,900
  • HTK+ – Rs 14,99,900
  • HTX – Rs 15,99,900

51.4 kWh Battery Pack

  • HTK+ ER – Rs 16,99,900
  • HTX ER – Rs 17,99,900
  • HTX+ ER – Rs 19,49,900
  • X-Line ER – Rs 19,99,900

வடிவமைப்பினை பொறுத்தவரை, முன் மற்றும் பின் விளக்குகளின் வடிவமைப்பு, பாடி கிளாடிங், பம்பர்களில் உள்ள இன்செர்ட்கள் மற்றும் 17-இன்ச் அலாய் வீல்கள் கூட, ICE இன்ஜின் கொண்ட சிரோஸ் காரில் உள்ளதைப் போலவே இருக்கின்றன.

டிரினிட்டி பனோரமிக் டிஸ்ப்ளேவில், 12.3-அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 12.3-அங்குல சென்ட்ரல் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் மற்றும் கிளைமேட் கண்ட்ரோல்களுக்கான 5.0-அங்குல யூனிட் ஆகியவை அடங்கும். சைரோஸ் EV-யில் வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் சார்ஜிங் பேட் மற்றும் 8-ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் போன்ற அம்சங்களும் உள்ளன.

சிரோஸ் EV காரில் கிளேசியர் ஒயிட் பேர்ல், ஃப்ராஸ்ட் ப்ளூ, கிராவிட்டி கிரே, பியூட்டர் ஆலிவ், மக்மா ரெட், ஐவரி சில்வர் மேட், ஐவரி சில்வர் க்ளாஸ் மற்றும் அரோரா பிளாக் பேர்ல் உட்பட ஒன்பது வண்ணத் தேர்வுகளில் வழங்குகிறது. X-லைன் டிரிம், எக்ஸ்க்ளூசிவ் மேட் கிராஃபைட் மற்றும் அரோரா பிளாக் பேர்ல் ஆகிய வண்ணங்களில் மட்டுமே கிடைக்கிறது.

கிளவுட் ப்ளூ/கிரே, ஓனிக்ஸ் பிளாக்/ஆஃப்-ஒயிட் மற்றும் ஓனிக்ஸ் பிளாக்/ஹண்டர் கிரீன் என மூன்று இன்டீரியர் தீம்கள் கிடைக்கின்றன.

Tags: Kia Syros EV
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version