Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

புதிய மாருதி சுசுகி எர்டிகா கார் விற்பனைக்கு வந்தது

by MR.Durai
21 November 2018, 8:16 pm
in Car News
0
ShareTweetSend

இந்தியாவின் முதன்மையான கார் தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுசுகி நிறுவனம், மேம்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை 2018 மாருதி சுசுகி எர்டிகா கார் மாடலை ரூ.7.44 லட்சம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

புதிய எர்டிகா கார் விலை, வசதிகள், என்ஜின் விபரம் புகைப்படம் போன்றவற்றை தொடர்ந்து காணலாம்.

டிசைன்

சுசூகி நிறுவனத்தின் Heartect பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இரண்டாம் தலைமுறை எர்டிகா கார் விற்பனையில் உள்ள மாடலை விட 10 கிலோ வரை எடை குறைந்ததாக வடிவமைக்கப்பட்டு முன்புறத்தில் மிக நேர்த்தியான கிரில் அமைப்புடன் எல்இடி ரன்னிங் விளக்குடன் கூடிய புராஜெக்ட்ர் முகப்பு விளக்குக்களை கொண்டு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு முந்தைய மாடலின் அளவுகளை பெற்றிருந்தாலும் ஆனால் கிரவுண்ட் கிளியரன்ஸ் 180 மிமீ ஆக மட்டும் குறைக்கபட்டுள்ளது.

இன்டிரியர் அமைப்பில் மாருதி டிசையர் மற்றும் புதிய ஸ்விஃப்ட் காரின் வடிவ அம்சங்களை பெற்று மிக நேர்த்தியான இருக்கை மற்றும் தாரளமான இடவசதி கொண்டதாக விளங்குகின்றது.

என்ஜின்

மாருதி சுசூகி நிறுவனத்தின் அதிகப்படியான எரிபொருள் சிக்கனத்தை வழங்கவல்ல Smart Hybrid Vehicle by Suzuki (SHVS) நுட்பத்தை பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் பெற்று விளங்குகின்றது.

105 hp ஆற்றல் மற்றும் 138 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் என்ஜின் 4 வேக ஆட்டோமேட்டிக் மற்றும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்று விளங்குகின்றது.

90 hp ஆற்றல் மற்றும் 200 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் DDiS சீரிஸ் டீசல் என்ஜின் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்று விளங்குகின்றது.

மைலேஜ்

எர்டிகா பெட்ரோல் கார் மைலேஜ் லிட்டருக்கு 19.34 கிமீ (மேனுவல்)

எர்டிகா பெட்ரோல் கார் மைலேஜ் லிட்டருக்கு 18.69 கிமீ (ஆட்டோமேட்டிக்)

எர்டிகா டீசல் கார் மைலேஜ் லிட்டருக்கு 24.52 கிமீ

வசதிகள்

புதிய மாருதி எர்டிகா கார் முந்தைய மாடலை விட பல்வேறு கூடுதல் வசதிகளை பெற்று விளங்குகின்றது. குறிப்பாக இரட்டை காற்றுப்பை, ஏபிஎஸ் பிரேக் மற்றும் இபிடி போன்றவை அனைத்து வேரியன்டிலும் வழங்கப்பட்டு டாப் மாடல்களில் மாருதி ஸ்மார்ட்பிளே அமைப்புடன் கூடிய ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதியுடன், ரியர் பார்க்கிங் கேமரா, ஆட்டோமேட்டிக் ஏசி, 15 அங்குல அலாய் வீல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்டு விளங்குகின்றது.

போட்டியாளர்கள்

விற்பனையில் உள்ள பிரபலமான டொயோட்டா இன்னோவா கிறிஸ்டா, ரெனோ லாட்ஜி, ஹோண்டா பிஆர்-வி மற்றும் மிக வேகமாக விற்பனை ஆகி வரும் பிரசத்தி பெற்ற புதிய மஹிந்திரா மராஸோ உள்ளிட்ட மாடல்களை நேரடியாக மாருதி எர்டிகா எதிர்கொண்டு மாருதி அரேனா ஷோரூம் வாயிலாக விற்பனை செய்யப்பட்ட உள்ளது.

புதிய எர்டிகா கார் விலை விபரம்

LXi Petrol MT – ரூ. 7.44 லட்சம்
VXi Petrol MT – ரூ. 8.16 லட்சம்
ZXi Petrol MT – ரூ. 8.99 லட்சம்
ZXi+ Petrol MT – ரூ. 9.50 லட்சம்

VXi Petrol AT – ரூ. 9.18 லட்சம்
ZXi Petrol AT – ரூ. 9.95 லட்சம்

Related Motor News

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

ரூ.10.50 லட்சம் முதல் புதிய மாருதி சுசூகி விக்டோரிஸ் விற்பனைக்கு வெளியானது

ஏப்ரல் 1, 2025 முதல் மாருதி சுசூகி கார்களின் விலை 4 % வரை உயருகின்றது

இந்தியாவிற்கான மாருதி சுசூகியின் இ விட்டாரா ஜனவரி 2025ல் அறிமுகம்.!

2025 மாருதி சுசூகி டிசையர் விற்பனைக்கு வெளியானது..!

டிசையர் காருக்கு முன்பதிவை துவங்கிய மாருதி சுசூகி

LDi Diesel MT – ரூ. 8.84 லட்சம்
VDi Diesel MT – ரூ. 9.56 லட்சம்
ZDi Diesel MT – ரூ. 10.39 லட்சம்
ZDi+ Diesel MT –ரூ. 10.90 லட்சம்

(விற்பனையக விலை பட்டியல்)

Tags: Maruti Suzuki
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

amaze Crystal Black Pearl’ colour

புதிய கருப்பு நிறத்தில் ஹோண்டா அமேஸ் கார் அறிமுகமானது

புதிய சிட்ரோயன் ஏர்கிராஸ் X முன்பதிவு துவங்கியது

புதிய சிட்ரோயன் ஏர்கிராஸ் X முன்பதிவு துவங்கியது

GNCAP-ல் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற மாருதி சுசூகி விக்டோரிஸ்

வின்ஃபாஸ்ட் VF6 எலக்ட்ரிக் காரின் சிறப்புகள் மற்றும் ஆன்-ரோடு விலை

ரூ.2 லட்சம் வரை சிறப்பு சலுகையை அறிவித்த கியா இந்தியா

சிட்ரோயன் Basalt X காரின் ஆன்-ரோடு விலை மற்றும் சிறப்பம்சங்கள்

ADAS பெற்ற டாடா நெக்ஸான்.EV விற்பனைக்கு ரூ.17.29 லட்சத்தில் அறிமுகம்

விக்டோரிஸ் மூலம் மாருதி சுசுகி கொண்டு வந்த நவீன வசதிகள்

ஃபோக்ஸ்வேகன் ID.Cross எலக்ட்ரிக் எஸ்யூவி காட்சிக்கு வந்தது

425கிமீ ரேஞ்ச் ஸ்கோடா எபிக் எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan