Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

மும்பையில் திறக்கப்படுகிறது பிக் பாய் டாய்ஸ் ஷோரூம்

by MR.Durai
31 July 2018, 2:10 pm
in Car News
0
ShareTweetSend

உயர்தரமான ஸ்போர்ட்ஸ் கார்களை வாங்க விரும்புவர்களுக்கான ஒரே இடமாக பிக் பாஸ் டாய்ஸ் நிறுவனம் விளங்கி வருகிறது. இந்த நிறுவனம் மும்பையின் நகரமான மகாராஷ்டிராவில் புதிய ஸ்டோர்-ஐ திறக்க உள்ளது. இதற்காக மொத்தமாக 15-20 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த ஷோரூம் எட்டு ஆடம்பர கார்களை காட்சிபடுத்தும் வகையில் பெரியதாக உருவாக்கப்பட உள்ளது. இந்த ஆடம்பர காரின் வாடிக்கையாளர்களாக விராத் கோலி, ஹோகித் சர்மா, யுவராஜ் சிங் மற்றும் தினேஷ் கார்த்திக், பாடகர் ஹனி சிங் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் அனுஷ்கா சர்மா, நேபா துபியா மற்றும் பிரின்ஸ் நருளா ஆகியோரும் இருந்து வருகின்றனர். இந்த புதிய ஸ்டோர் மூலம் ஆடம்பர கார்களை இதற்கு முன்புவிட இருந்ததை விட எளிதாக வாங்க முடியும்.

பிக் பாய் டாய்ஸ் நிறுவனர் மற்றும்  மேலாண்மை இயக்குனர் ஜடின் அஹுஜா தெரிவிக்கையில், ஏற்கனவே மும்பையை அடிப்படையாக கொண்ட செலிப்ரிட்கள் இந்த நிறுவன கார்களை வாங்கியுள்ள நிலையில், மேலும் மும்பை மார்க்கெட்டை வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்த புதிய ஸ்டோர் துவக்கப்பட உள்ளது. இந்த ஷோரூமில் வைப்பதற்காக சிறந்த ஆடம்பர கார்களை காட்சிக்கு வைக்க உள்ளோம்.

மேலும் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய சர்வீஸ் சென்டர்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ளது போன்று மும்பையில் வாடிக்கையாளர்களை கவருவது குறித்து பேசிய அவர், வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப சீவி வழங்க, பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுனர்களை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

காரை வாங்கும் போது கிடைக்கும் ஒப்பந்தத்துடன், வாடிக்கையாளர்களுக்கு 6 மாதம் அல்லது 15,000km வாரண்டி வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக இதுபோன்ற சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிராண்ட்கள் டெல்லி-NCR மாகாணத்தில், 30 சதவிகித வாகனங்களை விற்பனை செய்துள்ளது. தென்னிதியாவில் இந்த பிராண்ட்களுக்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்னும் அதிகமான ஸ்டோர்களை திறந்து வாடிக்கையாளர்களை கவர முடிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையை தொடர்ந்து ஹைதராபாத்தில் புதிய ஷோரூம் திறக்க முடிவு செய்துள்ளோம் என்றும் அஹுஜா தெரிவித்துள்ளார்.

Related Motor News

No Content Available
Tags: Big Boy Toyz
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

maruti suzuki victoris launched

ரூ.10.50 லட்சம் முதல் புதிய மாருதி சுசூகி விக்டோரிஸ் விற்பனைக்கு வெளியானது

GNCAP-ல் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற மாருதி சுசூகி விக்டோரிஸ்

GNCAP-ல் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற மாருதி சுசூகி விக்டோரிஸ்

வின்ஃபாஸ்ட் VF6 எலக்ட்ரிக் காரின் சிறப்புகள் மற்றும் ஆன்-ரோடு விலை

ரூ.2 லட்சம் வரை சிறப்பு சலுகையை அறிவித்த கியா இந்தியா

சிட்ரோயன் Basalt X காரின் ஆன்-ரோடு விலை மற்றும் சிறப்பம்சங்கள்

ADAS பெற்ற டாடா நெக்ஸான்.EV விற்பனைக்கு ரூ.17.29 லட்சத்தில் அறிமுகம்

விக்டோரிஸ் மூலம் மாருதி சுசுகி கொண்டு வந்த நவீன வசதிகள்

ஃபோக்ஸ்வேகன் ID.Cross எலக்ட்ரிக் எஸ்யூவி காட்சிக்கு வந்தது

425கிமீ ரேஞ்ச் ஸ்கோடா எபிக் எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்

2026 பிஎம்டபிள்யூ iX3 எலக்ட்ரிக் காரின் ரேஞ்ச் 805 கிமீ..!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan