ரூ.38.60 லட்சத்தில் பிஎம்டபிள்யூ 320d எடிஷன் ஸ்போர்ட் களமிறங்கியது

சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ தொழிற்சாலையில் உற்பத்தி செய்யபடுகின்ற பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் மாடலில் ஸ்போர்ட்டிவ் 320d எடிஷன் மாடல் ரூ.38.60 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ 320d எடிஷன் ஸ்போர்ட்

320d மாடலில் மிகவும் நேர்த்தியான ஸ்போர்ட்டிவ் தன்மையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள அம்சத்துடன் 4 சிலிண்டர் பெற்ற 2.0 லிட்டர் ட்வீன் டர்போ பவர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 190hp மற்றும் 400Nm டார்க்கினை வழங்கும் வகையிலான பின்புற சக்கரங்களுக்கு பவரை எடுத்து செல்ல 8 வேக ஆட்டிமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

7.2 விநாடிகளில் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்ட இந்த மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிமீ ஆக வரையறைக்கப்பட்டுள்ளது.  பி.எம்.டபிள்யூ 320d ஸ்போர்ட் எடிசன் மைலேஜ் லிட்டருக்கு 22.69 கிமீ ஆகும். கம்ஃபோர்ட், இக்கோ ப்ரோ, ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட் + என நான்கு விதமான டிரைவ் மோட்களை பெற்றதாக  320d மாடல் விளங்குகின்றது.

முகப்பில் பாரம்பரிய கிரில் அமைப்புடன் கூடியதாக அமைந்துள்ள 320டி மாடலில் கருப்பு மற்றும் சிவப்பு நிற இருக்கை அம்சத்துடன் கூடியதாக உள்ள ஐ டிரைவ் கன்ட்ரோலர் 6.5 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்றதாக பிஎம்டபிள்யூ ஆப்ஸ் உள்ளிட்ட அம்சங்களுடன் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இபிடி, டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் ஆப்ஷன், ரியர் வியூ கேமரா, பார்க் வியூ கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களை பெற்றதாக இருக்கும்.

பென்ஸ் சி கிளாஸ், வால்வோ  S60, ஜாகுவார் XE மற்றும் ஆடி A4 ஆகியவற்றுக்கு போட்டியாக  பிஎம்டபிள்யூ 320d எடிஷன் ஸ்போர்ட் போட்டியாக வந்துள்ளது.  பிஎம்டபிள்யூ 320d எடிஷன் ஸ்போர்ட் மாடல் விலை ரூ. 38.60 லட்சம் ஆகும்.

 

Exit mobile version