Automobile Tamilan

பிஎம்டபிள்யூ i5 எலக்ட்ரிக் மற்றும் 5 சீரிஸ் அறிமுகமானது

Eighth-gen BMW 5 Series sedan

சர்வதேச அளவில் பிஎம்டபிள்யூ i5 மற்றும் 5 சீரிஸ் என இரண்டு செடான் கார்களையும் அறிமுகம் செய்துள்ளது. தற்பொழுது பெட்ரோல், டீசல், ஹைபிரிட், பிளக் இன் ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் ஆகியவற்றில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எட்டாவது தலைமுறை பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரில் 520i, 520d, மற்றும் 520d xDrive, 530e மற்றும் 550e xDrive ஆகியவற்றுடன் பிஎம்டபிள்யூ i5 எலக்ட்ரிக் காரில் eDrive40 மற்றும் ஆல் வீல் டிரைவ் M60 xDrive என இரண்டு விதமாக வெளியிடப்பட்டுள்ளது.

2023 BMW i5

இரண்டு i5 மாடல்களிலும் 81.2kWh லித்தியம்-அயன் பேட்டரியை கொண்டுள்ளது. eDrive40 மாடல் 497-582km மற்றும் M60 xDrive 455-516km (WLTP) ஆக உள்ளது.

ரியர் வீல் டிரைவ் பெற்ற eDrive40 வேரியண்டில் உள்ள மின்சார மோட்டார் அதிகபட்சமாக 340hp மற்றும் 430Nm டார்க் வழங்குகின்றது.  0-100kph வேகத்தை எட்ட 6.0 விநாடிகளும் மற்றும் 193kph அதிகபட்ச வேகமாக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

அடுத்து, டாப் ஆல் வீல் டிரைவ் மாடல் M60 xDrive காரில் 259hp மற்றும் 365Nm கொண்ட மோட்டார் முன் மற்றும் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. 601hpபவர் மற்றும் 820Nm டார்க் ஒட்டுமொத்தமாக வழங்குகின்றது. 0-100kph வேகத்தை எட்ட 3.8 வினாடிகள் மற்றும் எலக்ட்ரானிக் முறையில் வரையறுக்கப்பட்ட அதிகபட்ச வேகம் 230kph ஆகும்.

i5 மின்சார பேட்டரி காரில் 11kW AC சார்ஜிங் வழங்கப்பட்டு, கூடுதலாக விருப்பமான சார்ஜர் மூலம் 22kW ஆக அதிகரித்துக் கொள்ளலாம். DC சார்ஜிங்  மூலம் திறன் 205kW கொண்டு 30 நிமிடங்களுக்குள் 10-80 சதவிகிதம் சார்ஜ் செய்யலாம்.

2023 BMW 5 series

தோற்ற அமைப்பு மற்றும் பல்வேறு மாற்றங்களை கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள எட்டாவது தலைமுறை பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரில் Cluster Architecture (CLAR) பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ 520i காரில் 205hp பவர் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டர்போ நான்கு சிலிண்டர் கொண்டதாகவும், ஐரோப்பிய சந்தைகளில் 190hp என்ஜின் கொண்டிருக்கலாம். 520d ஆனது 2.0-லிட்டர் டீசல் என்ஜின் 197hp பவரை வழங்குகின்றது.

530e பிளக்-இன் ஹைப்ரிட் 2.0-லிட்டர் என்ஜினில் 299hp பவரை ஒருங்கிணைந்த வெளியிடுகின்றது. xDrive மாடலுடன் சக்தி வாய்ந்த 550e பிளக்-இன் ஹைப்ரிட் 489hp  3.0 லிட்டர் என்ஜினை பெறும்.

இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ i5 மற்றும் 5 சீரிஸ் மாடல்கள் 2024 ஆம் ஆண்டின் துவகத்தில் எதிர்பார்க்கலாம்.

Exit mobile version