BYD வெளியிட்டுள்ள Atto 3 எலக்ட்ரிக் மாடலின் ஆரம்பநிலை Dynamic வேரியண்ட் ரூ.24.99 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இப்பொழுது ஆட்டோ 3 மாடல் ஆனது இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்று மூன்று விதமான வேரியண்டுகளில் கிடைக்கின்றது. Superior மட்டுமே தற்பொழுது ADAS சார்ந்த பாதுகாப்பு அம்சமானது இணைக்கப்பட்டிருக்கின்றது.
Premium மற்றும் Superior என இரண்டு வேரியண்டிலும் 201hp மற்றும் 310Nm டார்க் வெளிப்படுத்துகின்ற மின்சார எஸ்யூவி ஆனது 0-100kph வேகத்தை எட்டுவதற்கு 7.3 வினாடிகள் எடுத்துக் கொள்ளுகின்ற நிலையில், 60.48kWh பிளேட் பேட்டரி பேக்குடன் பொருத்தப்பட்டு ARAI சான்றிதழ் படி 521km ரேஞ்சுடன் ரிஜெனேரேட்டிவ் பிரேக்கிங்கையும் வழங்குகிறது.
புதிதாக வெளியிடப்பட்ட Dynamic வேரியண்ட் 49.92kWh பேட்டரியை பெற்று முழுமையான சிங்கிள் சார்ஜில் 468 கிமீ வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு DC ஃபாஸ்ட் சார்ஜரை கொண்டு ஏற்றினால் Atto 3 பேட்டரி பேக்கினை 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜிங் செய்ய 50 நிமிடங்கள் தேவைப்படும். ஏசி சார்ஜரைப் பயன்படுத்தும் போது, சிறிய பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 8 மணிநேரமும், பெரிய பேட்டரிக்கு சுமார் 10 மணிநேரமும் ஆகும். கூடுதலாக இந்நிறுவனம் 7kW ஹோம் சார்ஜர் மற்றும் 3kW போர்ட்டபிள் சார்ஜிங் பாக்ஸை வழங்குகிறது.
காரின் இன்டீரியரில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே கனெக்ட்டிவ் வசதிகளை வழங்கும் 12.8 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டு, 5 அங்குல டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் இணைக்கப்பட்டுள்ளது.
டாப் Superior வேரியண்டில் எலக்ட்ரிக் பவர் மூலம் இயங்கும் ஓட்டுநர் மற்றும் பயணிகள் இருக்கைகள் மற்றும் பல வண்ண சுற்றுப்புற விளக்குகள். ஆட்டோ 3 காரின் பாதுகாப்பு அம்சங்களில் ADAS தொழில்நுட்பம், 360 டிகிரி கேமரா, ABS, ESC, டிராக்ஷன் கட்டுப்பாடு, ஹீல் ஹோல்டு கட்டுப்பாடு மற்றும் ஏழு ஏர்பேக்குகள் ஆகியவை கொண்டுள்ளது.
(EX-showroom India)
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஃபேரிங் ஸ்டைல் மோட்டார் சைக்கிள் அப்பாச்சி RR 310R 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனைக்கு…
அமெரிக்காவின் பிரபலமான ஃபோர்டு இந்தியாவில் மீண்டும் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் இதற்கான கூட்டணியை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் அமைக்க உள்ளதாக…
வரும் அக்டோபர் 3ஆம் தேதி கியா நிறுவனத்தின் கார்னிவல் மற்றும் EV 9 எலெக்ட்ரிக் எஸ்யூவி என இரண்டு மாடல்களும்…
ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான 97.2cc என்ஜின் பொருத்தப்பட்டு வட்ட வடிவ ஹெட்லைட் பெற்ற HF டான் மாடலை சாலை சோதனை…
இந்தியாவின் பிரபலமான யமஹா R15M பைக்கில் R1 பைக்கில் இருந்து பெறப்பட்ட கார்பன் ஃபைபர் வகையிலான பேட்டர்னை வெளிப்படுத்தும் பாடி…
சமீபத்தில் அமெரிக்கா பயணம் மேற்கோண்டிருந்த தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் சந்திப்புக்கு பிறகு ஃபோர்டு இந்தியா தனது…