Auto News

சக்திவாய்ந்த BYD ஷார்க் PHEV பிக்கப் டிரக் அறிமுகமானது

byd shark

மெக்சிக்கோ சந்தையில் வெளியிடப்பட்டுள்ள BYD நிறுவனத்தின் முதல் பிக்கப் டிரக ஷார்க் PHEV அதிகபட்சமாக 435 hp பவரை வெளிப்படுத்துகின்ற 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பிஓய்டி நிறுவனத்தின் ‘Ocean Series’ வரிசையில் வெளியாகியுள்ள ஷார்க் டிரக்கில் பொருத்தப்பட்டுள்ள  1.5 லிட்டர் டர்போ சார்ஜ்டூ பெட்ரோல் என்ஜின் பிளக் இன் ஹைபிரிட் ஆப்ஷனுடன்  DMO (dual-mode off-road) வசதி கொண்டதாகவும் சிறப்பான ஆஃப் ரோடு அனுவபத்தை வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டு அதிகபட்சமாக 435hp பவரை வெளிப்படுத்துகின்றது.

0 முதல் 100 km/hr வேகத்தை வெறும் 5.7 வினாடிகள் மட்டுமே பிஒய்டி ஷார்க் எட்டுத்துக் கொள்ளுகின்றது. இந்த மாடலில் உள்ள பேட்டரி திறன் மூலம் 100 கிமீ பயணிக்கும் ரேஞ்ச் வெளிப்படுத்தும் நிலையில் இந்த பேட்டரியை 30-80% சார்ஜ் ஏறுவதற்கு 20 நிமிடங்கள் மட்டும் எடுத்துக் கொள்ளுகின்றது.

835 கிலோ சுமக்கும் திறன் மற்றும் 2,500 கிலோ இழுக்கும் திறனை பெற்றுள்ள இந்த பிக்கப் டிரக்கின் நீளம் 5,457mm, 1,971mm அகலம் மற்றும் 1,925mm  உயரம் பெற்றுள்ளது.

டபுள் கேப் பாடி கொண்டுள்ள BYD ஷார்க் டிரக்கில் C வடிவ எல்இடி ரன்னிங் விளக்குடன் முன்புறத்தில் எல்இடி லைட் பார் பெற்றுள்ள நிலையில், பின்புறத்தில் எல்இடி லைட் பாருடன் டெயில் லைட் கொண்டுள்ளது.

மிக நேர்த்தியான டேஸ்போர்டினை பெற்றுள்ள ஷார்க்கில் 12.8 அங்குல  இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன், மற்றும் 10.25-இன்ச் டிஜிட்டல் கிளஸ்ட்டரை கொண்டுள்ள காரில் 12-இன்ச் ஹெட்-அப் டிஸ்ப்ளே, 50W வயர்லெஸ் சார்ஜர், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே உள்ளிட்ட வசதிகளை பெற்றுள்ளது.

பிஒய்டி ஷார்க் மாடலுக்கு போட்டியாக ஃபோர்டு ரேஞ்சர், டொயோட்டா ஹைலக்ஸ், மற்றும் இசுசூ டி-மேக்ஸ் போன்ற பிக்கப் டிரக்குகளை எதிர்கொள்ளுகின்றது. இந்திய சந்தைக்கு ஷார்க் விற்பனைக்கு வெளியிடப்படுமா என்பது குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை.

இந்திய சந்தையில் BYD நிறுவனம் சீல் , ஆட்டோ 3 மற்றும் E6 எம்பிவி ஆகிய மாடல்கள் விற்பனைக்கு கிடைத்து வருகின்றது.

 

View Comments

Recent Posts

ஆடம்பர கார்களுக்கு எம்ஜி செலக்ட் டீலரை துவங்கும் ஜேஎஸ்டபிள்யூ..!

ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…

17 hours ago

160கிமீ ரேஞ்ச் வழங்கும் 2024 ரிவோல்ட் RV400 அறிமுகமானது

ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…

22 hours ago

இந்தியாவில் ஹோண்டாவின் 300-350cc பைக்குகள் ரீகால் அழைப்பு

கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…

1 day ago

முதல் நாளில் 1,822 முன்பதிவுகளை அள்ளிய கியா கார்னிவல்..!

கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…

1 day ago

டிரையம்ப் ஸ்பீடு T4 Vs ஸ்பீடு 400 வித்தியாசங்கள் என்ன..!

டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…

2 days ago

ரூ.84,990 விலையில் ரிவோல்ட் RV1, RV1+ இ-பைக் விற்பனைக்கு அறிமுகமானது

ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…

2 days ago