Categories: Car News

ரூ.7.99 லட்சம் விலையில் சிட்ரோன் பாசால்ட் எஸ்யூவி அறிமுகம்

சிட்ரோன் பாசால்ட்

யாரும் எதிர்பார்க்காத விலையில் சிட்ரோன் நிறுவனம் பாசால்ட் கூபே எஸ்யூவி ஸ்டைல் மாடலை விற்பனைக்கு ரூ.7.99 லட்சத்தில் அறிமுகம் செய்துள்ளது.

வேரியண்ட் வாரியான விலை விபரம் தற்பொழுது அறிவிக்கவில்லை என்றாலும் அறிவிக்கப்பட்டுள்ள விலையில் முன்பதிவு தற்பொழுது துவங்கப்பட்டுள்ளது. இந்த விலையானது அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டு விநியோகம் செப்டம்பர் மாதம் முதல் துவங்கும் என இந்நிறுவனம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. முன்பதிவு கட்டணமாக ரூ.11,000 வசூலிக்கப்படுகின்றது,

இந்த மாடலில் 1.2 லிட்டர் NA பெட்ரோல் எஞ்சின் மற்றொன்று 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் என இரண்டு விதமான ஆப்ஷனில் கிடைக்கின்றது.

1.2 லிட்டர் Puertech 82 NA எஞ்சின் அதிகபட்சமாக 82 PS பவர் மற்றும் 110 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக லிட்டருக்கு 18 கிமீ வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாப் வேரியண்டில் உள்ள 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் Puretech 110 எஞ்சின் பவர் 110 PS மற்றும் 190 Nm டார்க் (205Nm டார்க்கினை ஆட்டோமேட்டிக்) வெளிப்படுத்துகின்றது. இதில் ஆறு வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

மேனுவல் கியர்பாக்ஸ் உள்ள எஞ்சினின் மைலேஜ் அதிகபட்சமாக லிட்டருக்கு 19.5 கிமீ வெளிப்படுத்தும் மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல் 18.7 கிமீ லிட்டருக்கு வழங்கும் என உறுதிப்படுத்தியுள்ளது.

10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட வசதிகளுடன் 40க்கும் மேற்பட்ட கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களையும் பெறுகின்றது. 7.0 அங்குல டிஜிட்டல் கிளஸ்டர் கொண்டுள்ளது. பின் இருக்கைகளுக்கு தொடையின் கீழ் அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, வயர்லெஸ் போன் சார்ஜர் கொண்டிருப்பதுடன் 6 ஏர்பேக்குகளை, ESP, ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் டயர் பிரஷர் மானிட்டர் அடிப்படையாக கொண்டுள்ளது.

பாசால்ட்டில் You, Plus, Plus Turbo MT, Max Turbo MT, மற்றும் Plus Turbo AT, Max Turbo AT என மொத்தமாகாக 7 வேரியண்டுகளில் கிடைக்க உள்ளது. தற்பொழுது 1.2L NA You MT விலை ரூ.7.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

Recent Posts

செப்டம்பர் 16ல் புதிய டிவிஎஸ் அப்பாச்சி RR 310R அறிமுகம்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஃபேரிங் ஸ்டைல் மோட்டார் சைக்கிள் அப்பாச்சி RR 310R 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனைக்கு…

1 day ago

சென்னையில் ஃபோர்டு கார்களை தயாரிக்க ஜேஎஸ்டபிள்யூ கூட்டணி..?

அமெரிக்காவின் பிரபலமான ஃபோர்டு இந்தியாவில் மீண்டும் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் இதற்கான கூட்டணியை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் அமைக்க உள்ளதாக…

1 day ago

செப்டம்பர் 16ல் கியா கார்னிவல் முன்பதிவு துவங்குகின்றது

வரும் அக்டோபர் 3ஆம் தேதி கியா நிறுவனத்தின் கார்னிவல் மற்றும் EV 9 எலெக்ட்ரிக் எஸ்யூவி என இரண்டு மாடல்களும்…

1 day ago

மீண்டும் HF டான் பைக்கை வெளியிடும் ஹீரோ மோட்டோகார்ப்

ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான 97.2cc என்ஜின் பொருத்தப்பட்டு வட்ட வடிவ ஹெட்லைட் பெற்ற HF டான் மாடலை சாலை சோதனை…

1 day ago

புதிய கார்பன் ஃபைபர் பேட்டர்னில் 2024 யமஹா R15M விற்பனைக்கு அறிமுகமானது

இந்தியாவின் பிரபலமான யமஹா R15M பைக்கில் R1 பைக்கில் இருந்து பெறப்பட்ட கார்பன் ஃபைபர் வகையிலான பேட்டர்னை வெளிப்படுத்தும் பாடி…

2 days ago

மீண்டும் ஃபோர்டு இந்திய வருகை உறுதியானது..!

சமீபத்தில் அமெரிக்கா பயணம் மேற்கோண்டிருந்த தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் சந்திப்புக்கு பிறகு ஃபோர்டு இந்தியா தனது…

2 days ago