• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

சிட்ரோன் C3 ஏர்கிராஸ் காரின் படங்கள் கசிந்தது

by MR.Durai
25 April 2023, 3:43 pm
in Car News
0
ShareTweetSend

Citoen c3 aircross suv teased

வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியாக உள்ள 7 இருக்கை பெற்ற சிட்ரோன் C3 ஏர்கிராஸ் எஸ்யூவி காரின் படங்கள் முதன்முறையாக கசிந்துள்ளது. குறிப்பாக இந்த கார் விற்பனையில் உள்ள சி3 மாடலை அடிப்படையாக கொண்டிருக்கும்.

புதிய காரின் வெளிப்புற தோற்ற அமைப்பு, டேஸ்போர்டு, கிளஸ்ட்டர், போன்றவை கசிந்துள்ளது. இந்த காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பெற்றிருக்கலாம்.

சிட்ரோன் C3 ஏர்கிராஸ்

சிட்ரோன் கார்களுக்கு உரித்தான தோற்ற அமைப்புடன் கூடிய க்ரோம் கிரில் லோகோ கொடுக்கப்பட்டு எல்இடி விளக்குகள் மற்றும் பியானோ பிளாக் ஃபினிஷ் ஆகியவற்றின் கலவையானது முன்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

டாஷ்போர்டு தொடர்பான படத்தில் விற்பனையில் கிடைக்கின்ற C3 காரை போலவே உள்ளது. ஆனால் சற்று அகலமான டேஸ்போர்டாக காட்சியளிக்கின்றது. டச்ஸ்கிரீன் உடன் கூடிய  இன்ஃபோடெயின்மென்ட் 10.2-இன்ச் டிஸ்பிளே பெற்று பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெறக்கூடும்.

C3 ஏர்கிராஸ் காரில் டிரைவ் மோடுகளையும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை பயணிகளுக்கு மேற்கூரையில் ஏசி வென்ட்கள் பொருத்தப்பட்டுள்ளன. மூன்றாவது வரிசையில் உள்ள பயணிகளும் USB சார்ஜிங் போர்ட்களைப் பெறுகின்றனர்.

விற்பனையில் உள்ள C3 எஸ்யூவி காரில் 110PS 1.2-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளதால், அதே என்ஜினை பகிர்ந்து கொள்ளும் அல்லது சற்று கூடுதலான 130PS வெளிப்படுத்தலாம். ஆறு ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் என இரண்டிலும் வரக்கூடும்.

ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடர் போன்ற கார்களை சிட்ரோன் C3 ஏர்க்ராஸ் எதிர்கொள்ளும்.

Image source

Tags: Citroen C3 Aircross
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version