சிட்ரோன் இந்திய சந்தையில் மிக சவாலான நடுத்தர எஸ்யூவி சந்தையில் விற்பனைக்கு வெளியிட்ட C3 ஏர்கிராஸ் (Citroen C3 Aircross) காரில் கூடுதலாக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலை ரூ.12.85 லட்சம் விலையில் வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் வந்த ஹூண்டாய் கிரெட்டா முதல் ஹோண்டா எலிவேட், கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகன், ஸ்கோடா குஷாக், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் போன்ற மாடல்களுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
சி3 ஏர்கிராஸ் காரில் மேனுவல் மாடலை விட 15Nm டார்க் கூடுதலாக பெற்றுள்ள 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் பெற்ற 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 110 PS பவரை 5500rpm-லும் மற்றும் 205 Nm டார்க் 1750rpm-ல் வெளிப்படுத்துகின்றது.
இந்த மாடலில் பிளஸ் மற்றும் மேக்ஸ் என இருவிதமான வேரியண்ட் பிரிவில் 5 இருக்கை மற்றும் 5+2 இருக்கை என இருவிதமான சீட் ஆப்ஷனை பெற்றுள்ளது. 17 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல் உடன் மேக்ஸ் வேரியண்டில் 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உடன் இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ , 7-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 4 ஸ்பீக்கர்கள் + 2 ட்வீட்டர்கள் இடம்பெற்றுள்ளன.
Citroen C3 Aircross Automatic | |
---|---|
Variant | Ex-showroom Price |
Plus 5-Seater | ₹ 12,84,800 |
Max 5-Seater | ₹ 13,49,800 |
Max 5+2-seater | ₹ 13,84,800 |
சிட்ரோன் C3 ஏர்கிராஸ் மேனுவல் விலை ரூ.10 லட்சத்தில் துவங்கி டாப் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் ரூ.13.85 லட்சத்தில் நிறைவடைகின்றது. போட்டியாளர்களை விட மிக குறைந்த விலை 7 இருக்கை பெற்ற ஆட்டோமேட்டிக் கொண்ட மாடலாக இந்த பிரிவில் உள்ளது. தற்பொழுது இந்த காருக்கான முன்பதிவு கட்டணமாக ரூ.25,000 வசூலிக்கப்படுகின்றது.
(Ex-showroom India)