Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ரூ.10 லட்சத்தில் கிடைக்கின்ற டர்போ பெட்ரோல் கார் பற்றி தெரியுமா.?

by நிவின் கார்த்தி
5 March 2024, 10:12 am
in Car News
0
ShareTweetSend

2024 citroen c3

இந்திய சந்தையில் கிடைக்கின்ற டர்போ பெட்ரோல் கார்களில் ரூபாய் 10 லட்சத்துக்கும் குறைந்த விலையில் உள்ள சிட்ரோன் C3 ஹேட்ச்பேக் மாடல் மிக சிறப்பான ஃபன் டூ டிரைவிங் அனுபவத்தை வழங்குகின்றது.

82 PS வெளிப்படுத்துகின்ற 1.2 லிட்டர் சாதரண பெட்ரோல் என்ஜினில் 5 வேக மேனுவல் மற்றும் 110 PS வெளிப்படுத்துகின்ற 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரண்டு என்ஜின்களை பெறுகின்ற சி3 காரில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

Citroen C3

சிட்ரோன் சி3 ஹேட்ச்பேக் ஆரம்ப விலை ரூ.6.16 லட்சம் முதல் ரூ.9.07 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் 82 PS பவர் மற்றும் 115Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 1.2 லிட்டர் Puertech 82 சாதரண பெட்ரோல் என்ஜினில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடலின் மைலேஜ் லிட்டருக்கு 19.3 கிமீ ஆக உள்ளது.

c3

110 PS பவர் மற்றும் 190Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 1.2 லிட்டர் Puertech 110 டர்போ பெட்ரோல் என்ஜினில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடலின் மைலேஜூம் லிட்டருக்கு 19.3 கிமீ ஆக உள்ளது.

Citroen C3 Variant Ex-showroom Price on-road Price
Live ₹ 6,16,000 ₹ 7,47,654
Feel ₹ 7,23,000 ₹ 8,71,432
Feel Dual Tone ₹ 7,38,000 ₹ 8,91,653
Feel Vibe Pack ₹ 7,38,000 ₹ 8,91,653
Feel Dual Tone Vibe Pack ₹ 7,53,000 ₹ 9,06,543
Shine ₹ 7,75,800 ₹ 9,27,431
Shine Vibe Pack ₹ 7,87,800 ₹ 9,47,321
Shine Dual Tone ₹ 7,90,800 ₹ 9,50,432
Shine Dual Tone + Vibe Pack ₹ 8,02,800 ₹ 9,65,214
Turbo Feel Dual Tone ₹ 8,43,000 ₹ 10,10,876
Turbo Feel Dual Tone Vibe Pack ₹ 8,58,000 ₹ 10,28,542
Shine Turbo Dual Tone ₹ 8,95,800 ₹ 10,71,453
Shine Turbo Dual Tone + Vibe ₹ 9,07,800 ₹ 10,86,321

(All price onroad Tamil Nadu)

சிட்ரோன் பெரிய அளவில் டெக் சார்ந்த அம்சங்களை இணைக்கவில்லை என்றாலும் அடிப்படையான வசதிகளை கொடுத்து பட்ஜெட் விலையில் சிறப்பான காரை விற்பனை செய்து வருகின்றது.

டர்போ பெட்ரோல் என்ஜின்களில் ஆரம்ப நிலை வேரியண்டுகளாக ஹூண்டாய் i20 என்-லைன், நிசான் மேக்னைட், ரெனால்ட் கிகர், டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி 300, ஹூண்டாய் வெனியூ போன்ற கார்களில் டர்போ பெட்ரோல் என்ஜின் கிடைத்தாலும் ரூ.9-10 லட்சத்துக்கு குறைந்த விலையில் ஆரம்ப நிலை வேரியண்டின் எக்ஸ்ஷோரூம் விலை துவங்கினாலும் சி3 கார் மட்டுமே 8.43 லட்சத்தில் துவங்கி டாப் வேரியண்டும் ரூ.10 லட்சத்துக்குள் அமைந்துள்ளது.

Related Motor News

பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்

பிரீமியம் வசதிகளுடன் சிட்ரோயன் C3X வருகை உறுதியானது

மேம்படுத்தப்பட்ட சிட்ரோயனின் 2.0 என்ன எதிர்பார்க்கலாம்..?

ரூ.9.57 லட்சம் ஆரம்ப விலையில் சிட்ரோன் C3 ஸ்போர்ட்ஸ் எடிசன் வெளியானது

ரூ.8.38 லட்சம் ஆரம்ப விலையில் சிட்ரோன் C3 டார்க் எடிசனின் சிறப்பம்சங்கள்

மூன்று கார்களில் டார்க் எடிசனை வெளியிடும் சிட்ரோன்

Tags: CitroenCitroen C3
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

Maruti Suzuki suv teased victoris

செப்டம்பர் 3ல் மாருதியின் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது

kwid cng

புதிய ரெனால்ட் க்விட் என்னென்ன மாற்றங்கள் பெறலாம்.?

இந்தியாவில் வின்ஃபாஸ்ட் மின்சார கார்கள் செப்டம்பர் 6ல் அறிமுகம்

நவீன வசதிகளுடன் வருமா., 2025 மஹிந்திரா தார் எதிர்பார்ப்புகள்.!

புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்

எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்

BE 6 பேட்மேன் எடிசனை 999 ஆக உயர்த்திய மஹிந்திரா

2026 ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி என்ன எதிர்பார்க்கலாம்.!

ரூ.10 லட்சத்தில் மாருதி சுசூகியின் புதிய எஸ்யூவி செப்டம்பர் 3ல் அறிமுகம்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan