Categories: Car News

ஏலத்திற்கு தயாரான மஹிந்திராவின் முதல் தார் ராக்ஸ் எஸ்யூவி

Mahindra Thar ROXX red

மஹிந்திரா நிறுவனத்தின் ஐந்து கதவுகளை கொண்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட தார் ராக்ஸ் ஆஃப் ரோடு மற்றும் ஆன் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற எஸ்யூவி மாடல் முதலில் உற்பத்தி செய்யப்பட உள்ள VIN 001 சேஸ் எண் கொண்ட காரை ஏலத்தில் விட தயாராகி வருகின்றது. இதற்கான முன்பதிவு இன்று முதல் துவங்கப்படுகின்றது.

ஏலத்தில் பெறப்படும் தொகையை பொது நன்மைக்காக தொண்டு நிறுவனம் மூலம் செலவு செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது.

பல்வேறு ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற தார் ராக்ஸ்மஹிந்திரா தார் ராக்ஸ் விலை மற்றும் முழுமையான தகவல்கள் மாடலின் ஆரம்ப விலை ரூ.13 லட்சத்தில் துவங்குகின்ற நிலையில் இந்த மாடலின் ஆல் வீல் டிரைவ் கொண்ட வேரியண்டின் விலை விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2.0-லிட்டர், 160bhp மற்றும் 330Nm வளரும் m-Stallion டர்போ-பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.2-லிட்டர், mHawk டீசல் இன்ஜின் 153bhp மற்றும் 330Nm. ஆறு-வேக மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் இதில் பதிப்புகள் 4×2 டிரைவ் மட்டும் கிடைக்கும்.

டாப் மாடல்களில் 2.0-லிட்டர், 177bhp மற்றும் 380Nm வளரும் m-Stallion டர்போ-பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.2-லிட்டர், mHawk டீசல் இன்ஜின் 175bhp மற்றும் 370Nm. ஆறு-வேக மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் இதில் பதிப்புகள் 4×4 டிரைவ் மட்டும் கிடைக்கும்.

மஹிந்திரா தார் ராக்ஸ் எஸ்யூவி விலை ரூ.12.99 லட்சம் முதல் ரூபாய் 20.49 லட்சம் வரை அமைந்துள்ளது. 4WD வேரியன்ட் விலை விரைவில் அறிவிக்கப்படலாம்.