இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி ரக சந்தையில், முன்னணி மாடலாக விளங்கும் ஈக்கோஸ்போர்ட் மாடலில் புதிதாக ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் S  மற்றும் சிக்னேச்சர் எடிசன் என இரண்டு விதமான மாலை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் S

புதிய ஈக்கோஸ்போர்ட் எஸ் வேரியன்டில் 1.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 123 பிஎச்பி பவரையும், 170 என்எம் இழுவைத் திறனையும் வழங்க உள்ளது. புதிய 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. இதை தவிர இந்த வேரியன்டில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 98 பிஎச்பி பவர் மற்றும் 205 என்எம் டார்கினை வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது.

கருப்பு நிற பூச்சினை கொண்ட கிரில் மற்றும் பனி விளக்கு அறை, மேற்கூறை, கிரே நிறத்திலான 17 அங்குல வீல் , வெள்ளை நிற பூச்சை கொண்ட சி பில்லர் பெற்று விளங்குகின்ற எஸ் வேரியன்டில் இன்டிரியர் அமைப்பில் ஆரஞ்சு நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட சென்ட்ரல் கன்சோல், டோர் பேட்ஸ், மற்றும் இருக்கை பெற்றதாக வந்துள்ளது. மேலும் 4.2 அங்குல MID டிஸ்பிளே பெற்று எலெக்ட்ரிக் சன்ரூஃப் கொண்டதாக வரவுள்ளது.

ஃபோர்ட் ஈக்கோஸ்போர்ட் S – 11.37 லட்சம் (பெட்ரோல்)

ஃபோர்ட் ஈக்கோஸ்போர்ட் S – 11.89 லட்சம் (டீசல்)

ஃபோர்டு சிக்னேச்சர் எடிசன்

 

ஈக்கோஸ்போர்ட் சிக்னேச்சர் எடிசன் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள மாடலில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 98 பிஎச்பி பவர் மற்றும் 205 என்எம் டார்கினை வழங்குகின்றது. பெட்ரோல் எஞ்சின் 1.5 லிட்டர் கொண்டு அதிகபட்சமாக 122 பிஎச்பி பவர் மற்றும் 150 என்எம் டார்கினை வழங்குகின்றது. இந்த இரண்டு வேரியன்டிலும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது.

17 அங்குல அலாய் வீல் பெற்று போர்ட் ஈக்கோஸ்போர்ட் சிக்னேச்சர் எடிசன் மாடலில் இன்டிரியர் அமைப்பில் நீல நிறத்தை பெற்று சிக்னேச்சர் பேட்ஜ் கொண்டதாக வெளியாகியுள்ளது.

ஈக்கோஸ்போர்ட் சிக்னேச்சர் பெட்ரோல் – ரூ.10.40 லட்சம்

ஈக்கோஸ்போர்ட் சிக்னேச்சர் டீசல் – ரூ. 10.99 லட்சம்

(அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலை)