ஃபோர்டு எண்டேவர் ஏர்பேக் கோளாறு காரணமாக திரும்ப அழைப்பு

2004 முதல் 2014 வரை தயாரிக்கப்பட்ட 22,690 ஃபோர்டு எண்டேவர் எஸ்யூவி கார்களில் ஏற்பட்டுள்ள முன்பக்க ஏர்பேக் இன்ஃபிளேட்டர் கோளாறை நீக்குவதற்கு திரும்ப அழைக்கப்படுகின்றது. திரும்ப அழைக்கப்பட்ட வாகனங்கள் பிப்ரவரி 2004 முதல் செப்டம்பர் 2014 வரையிலான காலகட்டத்தில் சென்னை ஆலையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, இந்நிறுவனத்தின் மற்ற மாடல்களான ஃபோர்டு ஃப்ரீஸ்டைல், ஃபிகோ மற்றும் புதிய ஆஸ்பயர் ஆகியவற்றில் பேட்டரி கண்காணிப்பு அமைப்பு (BMS) வயரிங் ஹார்னஸை ஆய்வு செய்ய உள்ளது. செப்டம்பர் 2017 முதல் ஏப்ரல் 2019 வரை ஃபோர்டு சனந்த் ஆலையில் இருந்து தயாரிக்கப்பட்ட வாகனங்களில் அதிக கவனம் செலுத்தப்பட உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்று கார்களும் 96 ஹெச்பி பவரை வழங்கும், 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 100 ஹெச்பி பவரை வழங்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பெற்று இரண்டும் 5 ஸ்பீடு மேனுவலை ஸ்டாண்டர்டாகப் பெறுகின்றன) மூலம் இயக்கப்படுகின்றன, இருப்பினும் ஃபிகோ மற்றும் ஆஸ்பயர் கூடுதலாக 123 ஹெச்பி பவரை வழங்கும், 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் 6-வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

ஏர்பேக் கோளாறினை சரி செய்வதற்கு ஃபோர்டு தனிப்பட்ட முறையில் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு திரும்ப அழைப்பதைப் பற்றி குறிப்பிட உள்ளது. அருகில் உள்ள ஃபோர்டு டீலர்ஷிப்பிலும் தங்கள் வாகனங்களை சரிபார்க்கும்படி அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.