Automobile Tamilan

கிராஸ்ஓவர் ஸ்டைலில் வரவுள்ள டொயோட்டா டைசோர் பற்றி முக்கிய அம்சங்கள்

ஃபிரான்க்ஸ் அடிப்படையில் ரீபேட்ஜ் செய்யப்பட்ட டொயோட்டா டைசோர் (Taisor) கிராஸ்ஓவர் ரக மாடல் விற்பனைக்கு அடுத்த சில மாதங்களுக்குள் எதிர்பார்க்கப்படும் நிலையில் விலை ரூ.8 லட்சத்தில் துவங்க வாய்ப்புகள் உள்ளது.

upcoming toyota taisor

மாருதியின் ஃபிரான்க்ஸ் விற்பனைக்கு வெளியிடப்பட்ட ஒரு வருடத்திற்குள் 1,00,000 விற்பனை இலக்கை கடந்துள்ள நிலையில் சுசூகி மற்றும் டொயோட்டா கூட்டணியின் மூலம் ஃபிரான்க்ஸ் மாடலும் பகிர்ந்து கொள்ளப்பட உள்ளது.  தோற்ற அமைப்பில் மற்றும் அடிப்படையான கட்டுமானம் ஒரே மாதிரியாக இருந்தாலும் முன்புற பம்பர் மற்றும் கிரில் மாற்றியமைக்கப்பட்டு டொய்யோட்டா கார்களுக்கு உரித்தான அம்சத்தை கொண்டிருக்கும்.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் என்ற பெயரில் வரவுள்ள மாடலில் 1.2 லிட்டர் மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தை பெற்ற பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 90 hp குதிரைத்திறன் மற்றும் 113 Nm டார்க் உற்பத்தி செய்கின்றது. டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை பொறுத்தவரை 5 வேக மேனுவல் மற்றும் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் என இருவிதமான ஆப்ஷனில் வரக்கூடும்.

டாப் வேரியண்டில் சக்திவாய்ந்த 100 hp ,  148 Nm டார்க் உற்பத்தி செய்கின்ற 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் பொருத்தப்பட்டு 5 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற உள்ளது.

டைசர் மைலேஜ் விபரம் ;

சிஎன்ஜி  ஆப்ஷனில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற டைசோர் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினை அடிப்படையாக கொண்டு  77.5hp பவர் மற்றும் 98.5Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்று மைலேஜ் 28.51km/kg வழங்குகின்றது.

அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய டொயோட்டா டைசோரின் ஆரம்ப விலை ரூ.8 லட்சத்திற்குள் துவங்கலாம். இந்த மாடலுக்கு போட்டியாக மாருதி ஃபிரான்க்ஸ் உட்பட 4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள காம்பேக்ட் எஸ்யூவிகளுக்கு போட்டியாக அமைந்திருக்கும்.

மேலும் படிக்க ; குறைந்த விலை எஸ்யூவி கார்களின் பட்டியல்

Exit mobile version