இந்தியாவின் முதன்மையான மாருதி சுசூகி நிறுவனத்தின் கிராஸ்ஓவர் ஸ்டைல் பெற்ற மாருதி சுசூகி ஃபிரான்க்ஸ் எஸ்யூவி விற்பனைக்கு வெளியிடப்பட்ட 10 மாதங்களுக்குள் 1 லட்சம் விற்பனை இலக்கை வெற்றிகரமாக கடந்து சாதனை படைத்துள்ளது.
போட்டியாளர்களாக இந்த மாடலுக்கு காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் உள்ள பிரெஸ்ஸா உட்பட மேக்னைட், கிகர், நெக்ஸான், எக்ஸ்யூவி300, வெனியூ மற்றும் சொனெட் ஆகியவை உள்ளன.
ஏப்ரல் 2023ல் அறிமுகப்படுத்தப்பட்ட மாருதி ஃபிரான்க்ஸ் சந்தைக்கு வந்த 10 மாதங்களில் இந்த சாதனை எட்டியுள்ளது. கூடுதலாக, மாருதி CY2022ல் 10.4 சதவீதத்திலிருந்த எஸ்யூவி ரக பிரிவு விற்பனை CY2023ல் 19.7 சதவீதமாக உயருவதற்கு இந்த மாடலும் முக்கிய காரணமாகும்.
மாருதி சுசூகி சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவு மூத்த நிர்வாக அதிகாரி சஷாங்க் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “சிறந்த ஓட்டும் அனுபவத்துடன் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்ட மற்றொரு எஸ்யூவி மாடலாக உள்ள ஃபிரான்க்ஸ் வளர்ந்து வரும் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் எங்கள் போர்ட்ஃபோலியோவில் முக்கிய மாடலாக உள்ளது.
மாருதி ஃபிரான்க்ஸ் காரின் விலை ரூ. 7.47 லட்சம் முதல் ரூ. 13.14 லட்சம் ( எக்ஸ்-ஷோரூம்) வரை கிடைக்கின்றது.