தென் கொரியாவில் விற்பனை செய்யப்பட உள்ள ஹூண்டாய் i20 கார்களுக்கான குளோபல் NCAP சோதனை நடத்தப்பட்டது. இதில் இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் நிறுவனத்தின் i20 கார்கள், அடல்ட் பயணிகளுக்கான சோதனையில் மூன்று ஸ்டார் மற்றும் குழந்தைகள் பயணம் செய்யும் சோதனையில் 2-ஸ்டார் ரேடிங் பெற்றுள்ளது.
இந்த சோதனையின் போது காரின் முன்புறம் 64km/hr வேகத்தில் மோதியதில் 17 பாயின்ட்களுக்கு 10.15 பாயின்ட்கள் பெற்றது. காரின் வடிவம் மற்றும் கால் வைக்கும் பகுதி நிலையானது எனது இந்த சோதனையில் தெரிய வந்துள்ளது. இந்த சோதனை வாகனத்தில் டிரைவர் சீட் பெல்ட் ரீமைண்டர் மற்றும் இரண்டு முன்புற சீட்களுக்கும் சீட் பெல்ட் ரீமைண்டர் பொருத்தப்பட்டிருந்தது.
இந்த சோதனையில் குழந்தைகளுக்கான பாதுகாப்பபில் 49 பாயின்ட்களுக்கு 18.6 பாயின்ட்கள் பெற்று 2-ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. மூன்று வயது குழந்தைகளுக்கான ISFOIX அங்கரேஜ் மற்றும் லிமிட்டெட் பாதுகாப்பு இதில் குறைவாக உள்ளதே இந்த ரேட்டிங்கிற்கு காரணம். மேலும் இதில் சைடு எர்பேக்ஸ், கார்டன் எர்பேக்ஸ் மற்றும் ESC போன்றவை வழக்கம் போலவே ஐரோப்பிய ஸ்பெக்குகளிலும் இடம் பெற்றுள்ளது.