Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Automobile Tamilan Automobile Tamilan
  • Bike News
  • Car News
  • Bikes
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

ஹோண்டா சிட்டி காரில் பிஎஸ்6 பெட்ரோல் விற்பனைக்கு வெளியானது

Last updated: 11,December 2019 7:45 am IST
MR.Durai
Share
1 Min Read
SHARE

ஹோண்டா சிட்டி

பிரசத்தி பெற்ற ஹோண்டா நிறுவனத்தின் சிட்டி செடான் காரில் உள்ள1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷனில் முதற்கட்டமாக பெட்ரோல் மாடல் பிஎஸ்6 மாசு உமிழ்வு முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. பிஎஸ்4 மாடலை விட பிஎஸ் 6 சிட்டி விலை ரூ. 9,000 முதல் அதிகபட்சமாக ரூ.10,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

பிஎஸ்4 மாடலில் விற்பனைக்கு கிடைக்கின்ற டீசல் என்ஜின் காரின் சில வேரியண்டுகளின் விலையும் ரூ.5,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. 2020 ஏப்ரல் மாதத்துக்கு முன்பாக பிஎஸ்6 நடைமுறைக்கு இந்த என்ஜினை மாற்ற ஹோண்டா திட்டமிட்டுள்ளது. இதுதவிர இந்நிறுவனம், தனது முந்தைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு தற்போது 10 வருட வாரண்டி அல்லது 1,20,000 கிமீ வரை வழங்குவதாக அறிவித்துள்ளது.

சிட்டி, அமேஸ், சிவிக், ஜாஸ், டபிள்யூஆர்-வி, பிஆர்-வி, சிஆர்-வி, பிரியோ மற்றும் அக்கார்டு ஹைப்ரிட் உள்ளிட்ட வாகனங்களுடன் விற்பனை நிறுத்தப்பட்ட மொபிலியோ போன்ற மாடல்களுக்கும் வாரண்டி கிடைக்க உள்ளது.

மேலும் சிட்டி காரில் புதிய டிஜிபேட் 2.0 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட வசதிகளுடன், டர்ன் பை டர்ன் நேவிகேஷன், ப்ளூடூத் ஆதரவு மற்றும் வை-ஃபை இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

city carச

ஹோண்டா சிட்டி Petrol (BS-6) Diesel (BS-4)
SV MT ரூ. 9.91 லட்சம் ரூ. 11.11 லட்சம்
V MT ரூ. 10.66 லட்சம் ரூ. 11.91 லட்சம்
VX MT ரூ. 11.82 லட்சம் ரூ. 13.02 லட்சம்
ZX MT ரூ. 13.01 லட்சம் ரூ. 14.21 லட்சம்
V CVT ரூ. 12.01 லட்சம்
VX CVT ரூ. 13.12 லட்சம்
ZX CVT ரூ. 14.31 லட்சம்

(விலை பட்டியல் எக்ஸ்ஷோரூம் டெல்லி)

TAGGED:Honda City
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

citroen-year-end-carnival
Car News

சிட்ரோன் கார் வாங்கினால் ஒரு வருடத்துக்கு இலவச பெட்ரோல் சலுகை

24,November 2023
renault
Car News

குறைந்த விலை ரெனால்ட் கிகர் RXT(O) விற்பனைக்கு வந்தது

2,May 2023

2016 மெர்சிடிஸ் பென்ஸ் E கிளாஸ் விற்பனைக்கு வந்தது

25,June 2015

2017 பிஎம்டபிள்யூ 330i GT M ஸ்போர்ட் விற்பனைக்கு அறிமுகம்

18,October 2017
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?