Skip to content

ஹோண்டா சிட்டி ஸ்போர்ட் எடிசன் விற்பனைக்கு வெளியானது

honda city sport edition

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற சிட்டி செடானில் கூடுதல் வசதிகளுடன் கருமை நிற பாகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ஸ்போர்ட் எடிசன் என்ற பெயரில் ரூ.14,88,900 எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரேடியன்ட் ரெட் மெட்டாலிக், பிளாட்டினம் ஒயிட் பேர்ல் மற்றும் மெட்டியோராய்டு கிரே மெட்டாலிக் என மூன்று நிறங்களை பெற்ற சிட்டி ஸ்போர்ட்ஸ் எடிசன் சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட வேரியண்ட் மட்டும் விற்பனைக்கு கிடைக்கின்றது.

இன்டீரியரில் கருப்பு நிறத்துடன் சில இடங்களில் சிவப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கதவு, அப்ஹோல்ஸ்ட்ரி உள்ளிட்ட இடங்களில் உள்ளன. வெளிபுறத்தில், கிரில், பூட் ஸ்பாய்லர், அலாய் வீல்கள், ‘ஷார்க் ஃபின்’ ஆண்டெனா மற்றும் வெளிப்புற பின்புறக் காட்சி கண்ணாடி கவர் ஆகியவற்றில் கருப்பு நிறம் உள்ளது.

மற்றபடி, வசதிகள் உள்ளிட்ட எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து சிட்டி காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 121PS பவர் மற்றும் 145Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. மேனுவல் மற்றும் சிவிடி என இரண்டும் கிடைத்தாலும், சிவிடி கியர்பாக்ஸ் மட்டும் ஸ்போர்ட்ஸ் எடிசனில் உள்ளது.

honda city sport edition new