Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

பிஎஸ்-6 ஹூண்டாய் ஆரா காரின் என்ஜின் விபரம் வெளியானது

by automobiletamilan
November 20, 2019
in கார் செய்திகள்

hyundai aura

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஆரா செடான் காரில் இடம்பெற உள்ள பிஎஸ்-6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

பிஎஸ்-6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான முறையில் மேம்படுத்த இந்நிறுவனம் மேம்பட்ட எக்ஸ்ஹாஸ்ட் முறையின் மூலம் சுத்திகரிக்கப்பட்டு சாத்தியப்படுத்தியுள்ளது. ஹூண்டாய் ஆரா காரில் 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல், 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் டீசல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின்கள் இடம் பெறவுள்ளது. பிஎஸ் 4 ஆதரவில், 1.2 பெட்ரோல் 83 ஹெச்பி மற்றும் 114 என்எம் உற்பத்தி செய்கிறது. 1.2 டீசல் 75 ஹெச்பி மற்றும் 190 என்எம் உற்பத்தி செய்கிறது. எனவே பிஎஸ் 6-இணக்கமான பதிப்புகள் ஏறக்குறைய ஒரே சக்தி மற்றும் இழுவை திறன் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

மேலே, வழங்கப்பட்டுள்ள இரு என்ஜின்களிலும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5 வேக ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட உள்ளது.

புதிதாக இணைக்கப்பட உள்ள பிஎஸ்-6 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் முன்பாக ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி காரில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆரா செடானில் பொருத்தப்படும் போது பவர் குறைக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. 20 HP குதிரைத்திறன் மற்றும் 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் கப்பா T-GDI என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த என்ஜினில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

இந்தியாவில் புதிய வயது வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் எதிர்கால உமிழ்வு விதிமுறைகளை மனதில் கொண்டு, வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய மேனுவல் மற்றும் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் பவர் ட்ரெயின்கள் கொண்ட பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களின் பல்வேறு வேரியண்டுகள் வகுக்கப்பட்டுள்ளன. உமிழ்வு விதிமுறைகளின் மிக உயர்ந்த தரத்தை பூர்த்தி செய்ய ‘ வெளியேற்ற முறைக்கு பிறகு சுற்றுச்சூழலுக்கு மேம்பட்ட முறை’ உருவாக்குவதற்கு வலுவான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பதற்கும், ‘சிகிச்சை முறைக்குப் பிறகு’ செயல்திறனை மேம்படுத்துவதற்கும் ஹூண்டாய் ஆரா காரில்  மேம்பட்ட NOx டிராப் கேடிலிஸ்ட் மற்றும் PM ஃபில்டர்கள் பெற்றதாக வரவுள்ளது. hyundai aura bs-6 engine

புதிய கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் முன்புற தோற்ற உந்துதலை பெற்று சற்று குறைவான மாற்றங்களை மட்டும் புதிய ஆரா கார் பெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளது. மற்றபடி கூடுதலாக இணைக்கப்பட்ட பூட் பகுதியில் அமைந்துள்ள பம்பரில் சிறிய மாற்றங்கள் இருக்கும்.

இன்டிரியர் அமைப்பினை பொறுத்தவரை, தொடர்ந்து ஐ10 நியோஸ் போன்றே அமைந்திருப்பதுடன் டாப் வேரியண்டுகளில் 8.0 அங்குல் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்று ஆப்பிள் கார் ப்ளே , ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வதிகளுடன் கூடிய பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை வழங்கும் ப்ளூலிங்க் டெக்னாலாஜி பெற வாய்ப்புள்ளது.

Tags: Hyundai Auraஹூண்டாய் ஆரா
Previous Post

542 hp பவர்.., ஆஸ்டன் மார்டின் DBX எஸ்யூவி அறிமுகமானது

Next Post

மாருதி வேகன் ஆர் காரில் 1.0 லிட்டர் பிஎஸ்6 என்ஜின் அறிமுகம்

Next Post

மாருதி வேகன் ஆர் காரில் 1.0 லிட்டர் பிஎஸ்6 என்ஜின் அறிமுகம்

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version