ஹூண்டாய் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற கிரெட்டா மற்றும் அல்கசார் எஸ்யூவி மாடல்களில் கூடுதல் ரேஞ்சர் காக்கி நிறத்துடன் சிறிய அளவிலான தோற்ற மாற்றங்கள் மட்டுமே பெற்றதாக விற்பனைக்கு வரவுள்ளது.
மெக்கானிக்கல் மற்றும் டிசைன் சார்ந்த அம்சங்களில் பெரிதாக மாற்றம் இருக்காது. தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள டீசர் மூலம் பல இடங்களில் கருமை நிறத்துக்கு ஹூண்டாய் முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இன்டிரியரில் அட்வென்ச்சர் எடிசன் மாடல் கருப்பு நிறத்தை பெற்றுள்ளது.
Hyundai Creta and Alcazar Adventure Edition
க்ரெட்டா மற்றும் அல்கசார் எஸ்யூவி மாடல்களில் 116hp பவர், 250Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5-லிட்டர் டீசல் என்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக இணைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் என்ஜின் வரும்போது, க்ரெட்டா 115hp, 144Nm, 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது CVT என இரண்டு ஆப்ஷனில் கிடைக்கும். அதே நேரத்தில் அல்கசார் 160hp பவர், 253Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5-லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் இணைக்கப்பட்டுள்ளது. 6-வேக மேனுவல் அல்லது 7 டூயல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் பெற்றிருக்கின்றது.
அடுத்த சில வாரங்களுக்குள் ஹூண்டாய் கிரெட்டா அட்வென்ச்சர் மற்றும் அல்கசார் அட்வென்ச்சர் எடிசன் விற்பனைக்கு வெளியாக உள்ளது.