Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி காருக்கு முன்பதிவு துவங்கியது

by automobiletamilan
March 2, 2020
in கார் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

1f758 2020 hyundai creta interior

வரும் மார்ச் 17 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி காரின் இன்டிரியர், வசதிகள், என்ஜின் விபரம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் முன்பதிவு துவங்கியுள்ளது. புதிய கிரெட்டாவுக்கு முன்பதிவு கட்டணம் ரூபாய் 25 ஆயிரம் என நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

முந்தைய மாடலை விட முற்றிலும் மேம்பட்டதாக வந்துள்ள கிரெட்டாவின் முகப்பில் வழங்கப்பட்டு வந்த கிரில் அமைப்பில் புதிய கேஸ்கேடிங் அமைப்புடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. எல்இடி ஹெட்லைட், எல்இடி ரன்னிங் விளக்குகளும் உள்ளது.

காரின் பக்கவாட்டினை பொறுத்தவரை புதிய இரட்டை நிறத்திலான அலாய் வீல், மாற்றியமைக்கப்பட்ட வீல் ஆர்ச் கொண்டுள்ளது. அதேபோல, பின்புறத்தில் விற்பனையில் உள்ள மாடலின் எல்இடி டெயில் லைட் பெற்றிருப்பதுடன் பம்பரில் சிறிய அளவிலான மாறுதல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

d675e 2020 hyundai creta suv

இன்டிரியரில் கருப்பு மற்றும் பீஜ் நிறத்திலான டாஷ்போர்டு மிக நேரத்தியான வடிவமைப்பைப் பெறுகிறது. இந்த மாடலில் 7 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்டீயரிங்கில் ஆடியோ, புளூடூத் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் கட்டுப்பாடுகளைப் பெறுகிறது.

ஏசி வென்ட்களுக்குக் கீழே வைக்கப்பட்டுள்ள பெரிய 10.25 அங்குல இன்போடெயின்மென்ட் திரையுடன் இந்த கார் முழு டிஜிட்டல் கிளஸ்டரை பெறுவதுடன், இதில்  ப்ளூலிங்க் கனெக்ட்டிவிட்டி வசதியை பெறுகின்றது. எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்குடன் குளிரூட்டப்பட்ட இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை வழங்கப்படுகின்றது.

ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி

கிரெட்டா என்ஜின் விபரம்

புதிய 1.4 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 138 bhp பவர் மற்றும் 242 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜினில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். ஜிடிஐ டர்போ என்ஜின் 9.7 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டுகிறது. மேலும், 16.8 கிமீ (DCT) மைலேஜ் வழங்கும்.

1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், அதிகபட்சமாக 113 பிஹெச்பி பவர் மற்றும் 144 என்எம்  டார்க்கை உருவாக்குகிறது. இந்த என்ஜின் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஐவிடி (IVT – Intelligent continuously variable transmission) ஆட்டோ டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் மைலேஜ் 16.8 கிமீ (MT). மேலும், இந்த என்ஜின் 0-100 கிமீ வேகத்தினை எட்டுவதற்கு 11.8 வினாடிகள் தேவைப்படும்.

என்ஜின் பவர் டார்க் கியர்பாக்ஸ் மைலேஜ்
1.5L பெட்ரோல் 115 PS 144 Nm 6 வேக MT 16.8 km/l
1.5L பெட்ரோல் 115 PS 144 Nm CVT  17.1 km/l
1.4L டர்போ பெட்ரோல் 140 PS 242 Nm 7 வேக DCT 16.8 km/l
1.5L டர்போ டீசல் 115 PS 250 Nm 6 வேக MT 21.4 km/l
1.5L டர்போ டீசல் 115 PS 250 Nm 6 வேக AT 18.3 km/l

 

இறுதியாக, புதிய 1.5-லிட்டர் VGT டீசல் என்ஜினைப் பொறுத்தவரை, 113 பிஹெச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை வழங்குகின்றது. மேலும், 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் மாடல் வெறும் 11.5 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை பெற முடியும். க்ரெட்டா டீசல் கார் மைலேஜ் 21.4 கிமீ (MT) ஆகும்.

hyundai creta news in tamil

மிகவும் அபரிதமான வரவேற்பினை பெற்ற முதல் தலைமுறை கிரெட்டா காரின் விலையை விட சற்று கூடுதலாக ரூ.10 லட்சம் முதல் ரூ. 16 லட்சத்திற்குள் வெளியிடப்படலாம். இந்த மாடலுக்கு போட்டியாக கியா செல்டோஸ், எக்ஸ்யூவி 500, எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர் போன்றவற்றை எதிர்கொள்ள உள்ளது.

c770e all new creta

Tags: Hyundai Cretaஹூண்டாய் கிரெட்டா
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Refresh
Go to mobile version