Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

புதிய ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் 6 ஏர்பேக்குகள்

by MR.Durai
16 May 2023, 9:41 am
in Car News
0
ShareTweetSend

2023 hyundai exter suv

ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறிமுகம் செய்ய உள்ள புதிய எக்ஸ்டர் எஸ்யூவி காரில் 6 ஏர்பேக்குகள் உட்பட பல்வேறு நவீன பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற உள்ளது. என்ஜின், வேரியண்ட், போட்டியாளர்களை அறிந்து கொள்ளலாம்.

முதன்முறையாக 4 மீட்டர் நீளத்துக்குள் வரவிருக்கும் எக்ஸடரில் 6 ஏர்பேக்குகளை கொண்டிருக்கின்றது. குறைந்த விலையில் வரவுள்ள மாடலுக்கு கடுமையான சவாலினை ஏற்படுத்த டாடா பஞ்ச் எஸ்யூவி இந்த பிரிவில் முன்னிலை வகித்து வருகின்றது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டிலும் கிடைக்க உள்ளது.

ஹூண்டாய் எக்ஸ்டர்

4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற காம்பேக்ட் எஸ்யூவி ரக மாடலாக விளங்கும் ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் 6-ஏர்பேக்குகள் அனைத்து வேரியண்டிலும் பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும், 40 க்கு மேற்பட்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கும்.

81 hp பவரை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி என இரண்டிலும். சிஎன்ஜி ஆப்ஷனில் 69 hp பவர் மற்றும் 95.2Nm டார்க் வழங்கும். 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் வரவுள்ளது.

hyundai exter suv bookings

EX, S, SX, SX(O), மற்றும் SX(O) Connect என மொத்தமாக 5 விதமான வேரியண்டுகளில் வரவுள்ளது. வெளிப்புற தோற்ற அமைப்பில் இரு பிரிவுகளை கொண்ட எல்இடி புரொஜெக்டர் விளக்குகள் ஹெட்லைட், H- வடிவ எல்இடி ரன்னிங் விளக்குகள் கொண்டிருக்கின்றது.

முதல்முறை அம்சங்கள்

  • 6 ஏர்பேக்குகள் (டிரைவர், பயணிகள், கர்டைன் & பக்கவாட்டு) கொண்டுள்ளது.
  • அனைத்து வகைகளிலும்  26 பாதுகாப்பு அம்சங்களை பெற்றுள்ளது. துவக்க நிலை வேரியண்டுகளில் ஆப்ஷனலாக (E & S) உள்ளது.
  • ESC (Electronic Stability Control), VSM (Vehicle Stability Management) மற்றும் HAC (Hill Assist Control), 3-பாயின்ட் சீட் பெல்ட் & சீட்பெல்ட் நினைவூட்டல் (அனைத்து இருக்கைகள்), EBD உடன் ஏபிஎஸ், பர்க்லர் அலாரம் பெற்றுள்ளது.
  • 40க்கும் மேற்பட்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களில் குறிப்பாக இரட்டை கேமரா உடன் கூடிய டேஸ்கேம் (Dashcam), ISOFIX, ஹெட்லேம்ப் எஸ்கார்ட் வசதி, ரியர் பார்க்கிங் கேமரா வசதி ஆகியை உள்ளது.

ஹூண்டாய் எக்ஸடர் எஸ்யூவி காரின் விலையை ஜூலை மாத தொடக்கத்தில் அறிவிக்கும். இந்திய சந்தையில் பிரபலமான டாடா பஞ்ச், சிட்ரோன் C3, ரெனால்ட் கிகர் மற்றும் நிசான் மேக்னைட் உள்ளிட்ட எஸ்யூவிகளுக்கு போட்டியாக இருக்கும்.

Related Motor News

ஜிஎஸ்டி குறைப்பு., ரூ.2.40 லட்சம் வரை விலை குறையும் ஹூண்டாய் கார்கள்

எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்

குறைந்த விலையில் சன்ரூஃப் பெற்ற எக்ஸ்டரை வெளியிட்ட ஹூண்டாய்

குறைந்த விலையில் 2025 ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் Hy-CNG Duo வெளியானது

2025 ஏப்ரலில் ரூ.70,000 வரை தள்ளுபடியை அறிவித்த ஹூண்டாய்

ஏப்ரல் 2025ல் ஹூண்டாய் கார்களின் விலையை 3% வரை உயருகின்றது

Tags: Hyundai Exter
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

carens clavis price

காரன்ஸ் கிளாவிஸ் EVல் புதிய வேரியண்டுகளை வெளியிட்ட கியா

சிறப்பு டொயோட்டா ஹைரைடர் ஏரோ எடிசன் வெளியானது

சிறப்பு டொயோட்டா ஹைரைடர் ஏரோ எடிசன் வெளியானது

மேக்னைட்டில் கூடுதலாக ஏஎம்டி ஆப்ஷனிலும் சிஎன்ஜி வெளியிட்ட நிசான்

ADAS பாதுகாப்பினை பெற்ற டாடா நெக்ஸான் விற்பனைக்கு வெளியானது

மேம்படுத்தப்பட்ட லெக்சஸ் LM 350h இந்தியாவில் அறிமுகம்

ரூ.64.90 லட்சத்தில் புதிய மினி JCW கன்ட்ரிமேன் All4 இந்தியாவில் அறிமுகம்

ஹூண்டாயின் ரூ.8 லட்சத்தில் வரவுள்ள 2026 வெனியூ படங்கள் கசிந்தது

எம்ஜி இந்தியாவின் புதிய வின்டசர் EV இன்ஸ்பையர் எடிசன் வெளியானது

கியா காரன்ஸ் கிளாவிஸில் புதிய வேரியண்டுகள் வெளியானது

புதிய நிறங்களில் 2025 சுசூகி ஜிக்ஸர், ஜிக்ஸர் SF அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan