Automobile Tamilan

புதிய ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் படங்கள் கசிந்தது

Hyundai Exter suv front leaked

ஹூண்டாய் இந்தியா வெளியிட உள்ள புதிய எக்ஸ்டர் எஸ்யூவி காரின் உற்பத்திநிலை படங்கள் தென்கொரியாவில் இருந்து முதன்முறையாக கசிந்துள்ளது.  கிராண்ட் ஐ10 நியோஸ் பிளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டுள்ள காரின் விலை ₹ 6.50 லட்சம் முதல் துவங்க வாய்ப்புகள் உள்ளது.

விற்பனையில் உள்ள டாடா பஞ்சு எஸ்யூவி காரை எதிர்கொள்ள உள்ள எக்ஸ்டெர் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். பெட்ரோல் தவிர சிஎன்ஜி ஆப்ஷனில் எதிர்பார்க்கலாம்.

Hyundai Exter

4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள வெனியூ காரின் வடிவமைப்பினை தழுவிய சில அம்சங்களை பெற்றாலும் கூட தோற்ற அமைப்பில் மாறுபட்டதாக அமைந்திருக்கும். எக்ஸ்டர் காரின் வெளிப்புற தோற்ற அமைப்பில் இரு பிரிவுகளை கொண்ட எல்இடி புரொஜெக்டர் விளக்குகள் ஹெட்லைட், H- வடிவ எல்இடி ரன்னிங் விளக்குகள் கொண்டிருக்கின்றது.

15 இன்ச் டூயல் டோன் அலாய் வீல் பெற்ற காரில் குறைந்த வேரியண்டுகளில் ஸ்டீல் வீல் கொண்டுள்ளது. இது ரூஃப் ரெயில், பாடி கிளாடிங், எல்இடி டெயில் லேம்ப் மற்றும் சன்ரூஃப்  போன்றவற்றை பெற்றுள்ளது.

கனெக்டேட் டெக்னாலாஜி இன்ஃபோடெயின்மென்ட் வசதி பெற்ற ஹூண்டாய் எக்ஸ்டர் காரில்  டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், மல்டி ஃபங்க்ஷன் ஸ்டீயரிங் வீல் மற்றும் தானியங்கி ஏசி கட்டுப்பாடுகளுடன் வரும்.

எக்ஸ்டர் எஸ்யூவி காரில் 81 ஹெச்பி பவரை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பலாம். சிஎன்ஜி ஆப்ஷனிலும் கூடுதலாக எதிர்பார்க்கப்படுகின்றது.  டாப்-ஸ்பெக் வேரியண்டில் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு குதிரைத்திறன் 99 bhp மற்றும் 172 Nm டார்க் வழங்கும்.

விற்பனையில் உள்ள டாடா பஞ்ச், சிட்ரோன் C3, ரெனால்ட் கிகர் மற்றும் நிசான் மேக்னைட் உள்ளிட்ட எஸ்யூவிகளை எதிர்கொள்ள உள்ள எக்ஸ்டர் விற்பனைக்கு ஆகஸ்ட் மாதம் எதிர்பார்க்கலாம்.

image source – instagram/ seoul_car_spotting

Exit mobile version