ஹூண்டாய் இந்தியா விற்பனை அறிமுகம் செய்ய உள்ள மைக்ரோ எஸ்யூவி காரின் பெயரை எக்ஸ்டர் (EXTER) என உறுதிப்படுத்தியுள்ளது. டாடா பஞ்சு எஸ்யூவி உட்பட சிறிய ரக எஸ்யூவிகளுக்கு சவால் விடுக்கும் மாடலாக விளங்கும்.

தொடர்ந்து எக்ஸ்டர் காரின் டீசரை வெளியிட்டு வரும் ஹூண்டாய் நிறுவனம், அதன் முழுமையான வடிவமைப்பு, இன்டிரியர் தொடர்பான விபரங்களை தற்பொழுது வரை வெளியிடவில்லை.

Hyundai Exter SUV

வெனியூ காருக்கு கீழாக நிலைநிறுத்தப்பட உள்ள எக்ஸ்டர் எஸ்யூவி காரின் மிக நேர்த்தியான எல்இடி ஸ்பிளிட் ஹெட்லேம்ப் கொடுக்கபட்டு, கம்பீரமான பம்பர் மற்றும் கிரில் அமைப்பினை கொண்டிருக்கலாம்.

ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்யூவி காரில் 81 ஹெச்பி பவரை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பலாம். சிஎன்ஜி ஆப்ஷனிலும் கூடுதலாக எதிர்பார்க்கப்படுகின்றது.  டாப்-ஸ்பெக் வேரியண்டில் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு குதிரைத்திறன் 99 bhp மற்றும் 172 Nm டார்க் வழங்கும்.

விற்பனையில் உள்ள டாடா பஞ்ச், சிட்ரோன் C3, ரெனால்ட் கிகர் மற்றும் நிசான் மேக்னைட் உள்ளிட்ட எஸ்யூவிகளை எதிர்கொள்ள உள்ள எக்ஸர் விற்பனைக்கு ஆகஸ்ட் மாதம் எதிர்பார்க்கலாம்.

ஹூண்டாய் எக்ஸ்டர் விலை ரூ.6 லட்சம் முதல் ரூ.11 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) அமையலாம்.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் COO, திரு தருண் கார்க் பேசுகையில், “Z  தலைமுறை வாங்குபவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் எங்கள் புதிய எஸ்யூவி – ஹூண்டாய் எக்ஸ்டெர் பெயரை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.  Hyundai EXTER மாடல் எஸ்யூவி பாடி ஸ்டைலுடன் எங்களின் வரிசையில் உள்ள 8வது மாடலாகும்.