ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் பாதுகாப்பு தரம் ? – கிராஷ் டெஸ்ட்

8e831 hyundai grand i10 nios crash test

குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் Safer Cars For India சோதனை முடிவில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் கார் 2 நட்சத்திர பாதுகாப்பினை மட்டுமே பெற்றுள்ளது. குறிப்பாக குழந்தைகள் பாதுகாப்பிலும் 2 நட்சத்திரத்தை பெற்றுள்ளது.

உலகளாவிய புதிய கார் மதிப்பீட்டு திட்டம் (Global New Car Assessment Programme – Global NCAP) மையத்தின் கிராஷ் டெஸ்ட் சோதனையில் மணிக்கு 64 கிமீ வேகத்தில் ஹூண்டாய் கிராண்ட் 10 நியோஸ் இரண்டு ஏர்பேக் பெற்ற வேரியண்ட் மோத வைத்து சோதனை நிகழ்த்தப்பட்டது.

தலை மற்றும் கழுத்து பகுதிக்கு சிறப்பான பாதுகாப்பினை வழங்கினாலும், ஓட்டுநரின் நெஞ்சு பகுதிக்கு மிக குறைவான பாதுகாப்பும், உடன் பயணிப்பவருக்கு போதுமான அளவில் நெஞ்சு பகுதிக்கு பாதுகாப்பு வழங்குகின்று. இந்த காருக்கு கட்டுமானம் மற்றும் கால் வைக்கின்ற பகுதி  ‘நிலையற்றது’ என்றும், பாடிஷெல் ‘மேலும் பளுவை தாங்கும் ’ திறன் கொண்டதல்ல என்று குறிப்பிட்டுள்ளது.

வயதுவந்தோர் பாதுகாப்பில் கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலுக்கு 17 புள்ளிகளில் 7.05 புள்ளிகளைப் பெற்றுள்ளது.  குழந்தை சார்ந்த பாதுகாப்பு அமைப்பில் 49 புள்ளிகளுக்கு 15.0 புள்ளிகளை மட்டுமே எடுத்துள்ளது. எனவே, இந்த காரின் வயது வந்தோர் பாதுகாப்பு 2 நட்சத்திரமும், குழந்தைகள் பாதுகாப்பில் 2 நட்சத்திரமும் பெற்றுள்ளது. குறிப்பாக 3 வயதுக்கு உட்பட குழந்தைகளின் பாதுகாப்பில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

2020 Safer Cars For India திட்டத்தில் சோதனை செய்யப்பட்ட கியா செல்டோஸ் இரண்டு ஏர்பேக்குகளை பெற்ற மாடல் 3 நட்சத்திர மதிப்பீட்டையும், மாருதி எஸ்-பிரெஸ்ஸோ ஒரு ஏர்பேக்குகளை பெற்ற மாடல் பூஜ்ய நட்சத்திர பாதுகாப்பினை மட்டுமே கொண்டுள்ளது.

web title : Hyundai Grand i10 Nios scores two star global ncap

Exit mobile version