இந்தியாவில் ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வதற்கான முதலீடு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் இந்திய தொழிற்சாலைகளை பார்வையிட ஹூண்டாய் மோட்டார் குழும நிறுவனத்தின் செயல் தலைவர் திரு. யூசன் சுங் சென்னை வந்திருந்தார்.
மேலும் யூசன் சுங் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களை சந்தித்து தமிழ்நாட்டில் மேற்கொள்ளக்கூடிய முதலீடு குறித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது தொழில்துறை அமைச்சர் திரு டி.ஆர்.பி ராஜா மற்றும் அரசு அதிகாரிகள்,ஹூண்டாய் இந்திய தலைவர்கள் உடனிருந்தனர்.
Hyundai and Kia EV plans
இந்திய சந்தையில் ஹூண்டாய் 2032 ஆம் ஆண்டிற்குள் ஐந்து EV வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மறுபுறம், கியா மோட்டார்ஸ், 2025 முதல் உள்ளூர் சந்தையில் சிறிய EV கார்களை உற்பத்தி செய்யும், பின்னர் படிப்படியாக பல்வேறு விலைப் புள்ளிகளில் அதிக ரேஞ்சு மற்றும் விலை கொண்ட பேட்டரி எலக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் R&D மையத்திற்கு அதன் நிர்வாகத் தலைவர் சுங் வருகை தந்ததையொட்டி, எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு தொடர்பான திட்டம் பகிரப்பட்டுள்ளது. தென் கொரிய கார் தயாரிப்பு நிறுவனம், இந்திய சந்தையில் 2030 ஆம் வருடத்திற்குள் 50 லட்சம் பயணிகள் கார்களை விற்பனை செய்யும் என்று எதிர்பார்க்கிறது, இதில் 48 சதவீதம் எஸ்யூவிகளாகவும், 30 சதவீதம் மின் வாகனங்களாகவும் இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.
“எலக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் விற்பனைக்கு இந்திய நாடு முக்கிய மையமாக மாறி வருகிறது. இந்திய அரசாங்கம் வலுவான பேட்டரி மின்சார வாகன கொள்கையை பின்பற்றுகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் மொத்த வாகன விற்பனையில் 30 சதவீத பங்களிப்பை EV களின் நோக்கத்துடன் கொண்டுள்ளது” என்று இந்நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க – ரூ. 20,000 கோடி ஹூண்டாய் இந்தியா முதலீடு திட்டங்கள்