Categories: Car News

குறைந்த விலையில் வெனியூ காரிலும் சன்ரூஃப் வெளியிட்ட ஹூண்டாய்

venue sunroof

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது. இந்த ஆரம்ப நிலை சன்ரூஃப் மாடல் விலை ரூ.8.23 லட்சம் ஆகும்.

ஆரம்ப நிலை இந்த மாடலில் ஹாலஜென் ஹெட்லேம்ப், மேனுவல் ஏசி போன்றவற்றுடன் அட்ஜஸ்டபிள் ஹேண்ட் ரெஸ்ட் மற்றும் 60:40 இருக்கைகள், அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களில் ஆறு ஏர் பேக்குகள், அனைத்து இருக்கைகளுக்கும் 3-பாயின்ட் சீட்பெல்ட்கள், TPMS, ESC, ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் ABS மற்றும் EBD ஆகியவை உள்ளன.

இந்த மாடல் 83hp, 114Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை பெற்று E+ வேரியண்டில் மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.

  • Hyundai VENUE E+ INR 8,23,100

சமீபத்தில் ஹூண்டாய் எக்ஸ்டர் மாடல் இரண்டு சன்ரூஃப் வேரியண்டுகளை கொண்டுள்ளது.