
மாருதி சுசூகி நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் மாடலாக வந்துள்ள புதிய இ விட்டாரா எஸ்யூவி 49kwh மற்றும் 61kwh என இரு விதமான பேட்டரி ஆப்ஷனுடன் வரவுள்ள நிலையில் டாப் மாடல் ரேஞ்ச் ARAI சான்றிதழ் படி 543 கிமீ வரும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
Maruti Suzuki E Vitara
விற்பனைக்கு ஜனவரி 2026 முதல் வாரத்தில் விலை அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதற்கு முன்பாக புக்கிங் துவங்கப்பலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அறிமுகத்திற்கு முன்பாக மாருதி நிறுவனம் 2000க்கு மேற்பட்ட பிரத்தியேக சார்ஜிங் நிலையங்கள், 13 சார்ஜிங் ஆப்ரேட்டர்களுடன் கூட்டணி அமைத்துள்ளது. மேலும், 2030க்குள் 1 லட்சம் பொது சார்ஜிங் மையங்களின் ஆதரவை வழங்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கூடுதலாக, ஒவ்வொரு 5 முதல் 10 கிமீ இடைவெளியிலும் ஒரு சார்ஜிங் மையம் இருக்க வேண்டும் என்பதே மாருதியின் இலக்கு, இதனால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையும், காசிரங்கா முதல் புஜ் வரையும் இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் சார்ஜர்கள் அமைக்கப்படும் எனவும், E for Me App மூலமாக வீட்டில் சார்ஜ் செய்வது மற்றும் பொது இடங்களில் சார்ஜ் செய்வது என அனைத்தையும் ஒரே ஆப் மூலம் நிர்வகிக்கலாம்.
சுமார் 1500க்கு மேற்பட்ட சர்வீஸ் சென்டர்களை தயார்ப்படுத்தியுள்ள மாருதி உங்கள் வீட்டிற்கே வந்து சர்வீஸ் செய்யும் வசதியுடன் இதற்காக பிரத்யேகமாக 1.5 லட்சம் பணியாளர்கள் பயிற்சி பெற்றுத் தயாராக உள்ளனர்.
எம்ஜி போல இந்நிறுவனமும் Battery-as-a-Service (BaaS) பேட்டரிக்கு மட்டும் வாடகை செலுத்தும் முறை மற்றும் சப்ஸ்கிரிப்ஷன் (Subscription) ஆப்ஷன்கள் கொண்டு வரவுள்ளதால் காரின் விலை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் வாய்ப்புள்ளது. பை-பேக் எனப்படும் முறையில் காரை திரும்ப விற்கும் போது குறிப்பிட்ட விலைக்கு இந்நிறுவனமே எடுத்துக்கொள்ளும் உத்தரவாதமும் வழங்கப்படுகிறது.

E Vitara Battery விபரம்
சுசூகி மற்றும் டொயோட்டா கூட்டணியின் புதிய HEARTECT-e பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட்டுள்ள இவிட்டாரா காரின் ஆரம்ப நிலை Delta வேரியண்ட் 344 கிமீ ரேஞ்ச் என WLTP சான்றிதழ் பெற்றுள்ள நிலையில் 49kwh பேட்டரி பெற்று 144 PS பவர் மற்றும் 189Nm டார்க் வெளிப்படுத்தும். 10-100 % வீட்டில் சார்ஜ் செய்ய 7kW சார்ஜர் பயன்படுத்தினால் 49kWh பேட்டரி ஆனது 6.5 மணிநேரமும், 11kW சார்ஜரை பயன்படுத்தினால் 4.5 மணிநேரம் எடுத்துக் கொள்வதுடன், கூடுதலாக DC ஃபாஸ்ட் சார்ஜிங் 10-80 % பெற 45 நிமிடம் போதுமானதாகும்.
அடுத்து, Zeta, Alpha வேரியண்டில் 61Kwh பேட்டரி பெறும் FWD வேரியண்ட் 174 PS பவர் மற்றும் 189Nm டார்க் வழங்குகின்ற இந்த மாடல் முழுமையான சார்ஜில் 543 கிமீ ரேஞ்ச் வழங்கலாம். சர்வதேச அளவில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் கிடைக்கிற நிலையில் இந்தி வருகை குறித்து எந்த தகவலும் இல்லை. 10-100 % வீட்டில் சார்ஜ் செய்ய 7kW சார்ஜர் பயன்படுத்தினால் 61kWh பேட்டரி ஆனது 9 மணிநேரமும், 11kW சார்ஜரை பயன்படுத்தினால் 5.5 மணிநேரம் எடுத்துக் கொள்வதுடன், கூடுதலாக DC ஃபாஸ்ட் சார்ஜிங் 10-80 % பெற 45 நிமிடம் போதுமானதாகும்.
BNCAP Results
பாரத் கிராஷ் டெஸ்ட் சோதனையில் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் பெற வேண்டிய 32 புள்ளிகளுக்கு 31.49 புள்ளிகளை பெற்று 5 நட்சத்திர மதிப்பீட்டையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் பெற வேண்டிய 49-க்கு 43 புள்ளிகளை பெற்று 5 ஸ்டார் ரேட்டிங்கை உறுதி செய்துள்ளது.
இந்த காரில் பாதுகாப்பிற்குப் பஞ்சமே இல்லை என்பது போல 7 ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமரா Level-2 ADAS (அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்), எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் வசதியுடன் வரவுள்ளது.


