கியா காம்பாக்ட் எஸ்யூவி சோதனை ஓட்ட படம் வெளியானது

-QYI-

இந்தியா மற்றும் தென் கொரியாவில் சோதனை செய்யப்பட்டு வருகின்ற கியா காம்பாக்ட் எஸ்யூவி காரின் சாலை சோதனை ஓட்ட படங்கள் வெளியாகியுள்ளது. முன்பாக இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஹூண்டாய் வென்யூ அடிப்படையிலான 4 மீட்டருக்கு குறைந்த நீளம் கொண்ட மாடலாக கியாவின் QYI விளங்க உள்ளது.

விற்பனையில் கிடைத்து வருகின்ற வென்யூ காரினை விட கூடுதலான பிரீமியம் வசதிகளை பெற்றதாக விளங்க உள்ள இந்த எஸ்யூவி QYI என்ற குறீயிட்டு பெயரில் தயாராகி வரும் இந்த காரில் ஹூண்டாய் வென்யூ எஸ்யூவியின் பெரும்பாலான உதிரிபாகங்கள் மற்றும் என்ஜின் உட்பட போன்றவற்றை பகிர்ந்து கொள்ள உள்ளது.

இன்டிரியர் அமைப்பில் செல்டோஸில் இடம்பெற்றுள்ள UVO கனெக்ட்டிவிட்டி அம்சமான ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே உள்ளிட்ட வசதிகளுடன் இணையம் சார்ந்த பல்வேறு அம்சங்களை பெற்றிருக்கும்.

வென்யூ காரில் உள்ள என்ஜினை பெற உள்ள இந்நிறுவன எஸ்யூவி பிஎஸ் 6 ஆதரவை பெற்ற 120 HP குதிரைத்திறன் மற்றும் 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 83 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 115 என்எம் முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் ஆகியவற்றினை பெற உள்ளது. செல்டோஸ் காரில் உள்ள 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பவர் குறைக்கப்பட்டு வெளியிடப்படலாம்.

அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் கியா கார்னிவல் எம்பிவி விற்பனைக்கு வெளியாக உள்ளதை தொடர்ந்து 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காம்பாக்ட் எஸ்யூவி மாடலை கியா காட்சிப்படுத்த உள்ளது. அதனை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டின் மத்தியில் இந்த 4 மீட்டருக்கு குறைந்த நீளத்தை பெற்ற கியா எஸ்யூவி காருக்கு போட்டியாக ஹூண்டாய் வென்யூ, மாருதி விட்டாரா பிரெஸ்ஸாமஹிந்திரா எக்ஸ்யூவி300ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டாடா நெக்ஸான் உள்ளிட்டவை விளங்க உள்ளது.

படங்கள் உதவி – https://www.bobaedream.co.kr/view?code=best&No=262484&vdate=

Exit mobile version