Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

ரூ.20 லட்சத்தில் வரவுள்ள எம்ஜி எலக்ட்ரிக் எம்பிவி அறிமுக விபரம்

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 20,May 2024
Share
2 Min Read
SHARE

mg cloud ev

SAIC குழுமத்தின் கீழ் விற்பனை செய்யப்படுகின்ற கிளவுட் EV காரின் அடிப்படையில் எம்ஜி மோட்டார் நிறுவனம் எலக்ட்ரிக் எம்பிவி மாடலை இந்திய சந்தையில் ரூபாய் 20 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக வெளியிட உள்ளது.

தற்பொழுது இந்த மாடல் ஆனது இந்திய சந்தையில் சாலை சோதனை ஓட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றது. மேலும் டிசைன் வரைபடம் காப்புரிமையும் பெறப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் சில நாடுகளில் கிளவுட் EV என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டாலும் இந்திய சந்தைக்கு இந்த மாடலானது வேறொரு புதிய பெயரை பெற்றிருக்கும் அனேகமாக எம்ஜி மோட்டார் நிறுவனம் EV பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஏதேனும் ஒரு பெயரை பெற்றிருக்கலாம்.

இந்தியாவில் எம்ஜி மோட்டார் நிறுவனம்  Excelor EV, Wemblor EV, Aulder EV, Trudor EV, Waltor EV, Chester EV ஆகிய பெயர்களை வர்த்தக முத்திரையாக பதிவு செய்துள்ளதால், இவற்றில் ஏதேனும் ஒரு பெயரை இந்த எலக்ட்ரிக் எம்பிவி மாடல் பெறக்கூடும்.

MG Cloud EV

இந்தோனேசியா சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற கிளவுட் இவி மாடலில் எம்பிவி ஸ்டைலை பெற்றிருந்தாலும் 5 இருக்கைகளை மட்டுமே பெற்று  37.9kWh மற்றும் 50.6kWh என இருவிதமான பேட்டரி ஆப்ஷனை பெற்றிருக்கின்றது. இந்த மாடல் 134hp பவரை வெளிப்படுத்தும் நிலையில் குறைந்தபட்ச 37.9kWh பெற்ற வேரியண்ட் 360 கிமீ ரேஞ்ச் மற்றும் டாப் 50.6kWh பேட்டரி பெற்றுள்ள மாடல் 460 கிமீ ரேஞ்ச் வழங்குகின்றது.

cloud ev interior

இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வரவுள்ள மாடலில் இடம்பெற உள்ள பேட்டரி விபரம் எதுவம் உறுதி செய்யப்படவில்லை. ஒருவேளை இந்தியாவில் கிடைக்கின்ற எம்ஜி ZS EV காரில் இடம்பெற்றிருக்கின்ற 461 கிமீ ரேஞ்ச் வழங்குகின்ற 50.3 kwh பேட்டரி பேக் பயன்படுத்தப்படுமா என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை.

More Auto News

கலர்கலராய் ரெனோ க்விட் லைவ் ஃபார் மோர் அறிமுகம்
3 மாதங்களில் கியா செல்டோஸ் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது
1000hp பவர்.., புதிய GMC ஹம்மர் EV பிக்கப் டிரக் அறிமுகமானது
வேகன் ஆர், பலேனோ கார்களை திரும்ப அழைக்கும் மாருதி சுசுகி
ஆடி ஏ6 ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்

குறிப்பாக எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது கார்களில் உயர் ரக டெக் கனெக்ட்டிவிட்டி அம்சங்களை வழங்குவதில் முன்னோடியாக உள்ளதால் பல்வேறு வசதிகளை பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.  மேலும் லெவல் 2 ADAS சார்ந்த உயர்ரக இரண்டாம் கட்ட பாதுகாப்பு வசதிகளும் பெறுவதற்கு வாய்ப்புள்ளது.

அடுத்த சில மாதங்களுக்குள் சந்தைக்கு வரவுள்ள எம்ஜி எலக்ட்ரிக் எம்பிவி மாடலின் விலை ரூ.15-20 லட்சத்துக்கும் குறைவாக துவங்க வாய்ப்புகள் உள்ளது.

mg cloud ev

2025 skoda kylaq
ஜனவரி 2025ல் ஸ்கோடா கைலாக் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்
ரெனால்ட் கைகர் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது
ஜனவரி 2024ல் எம்ஜி மோட்டார் கார்களின் விலை உயருகின்றது
2023 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா முழு விலை பட்டியல்
விரைவில் டாடா கர்வ் பிளாக் எடிசன் விற்பனைக்கு வெளியாகிறது
TAGGED:MG Cloud EVMG Motor
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
triumph speed 400 bike on-road price
Triumph
டிரையம்ப் ஸ்பீட் 400 பைக் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
honda cb 125 hornet
Honda Bikes
ஹோண்டா CB 125 ஹார்னெட் ஆன்-ரோடு விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
ஹோண்டா ஷைன் 125 பைக்
Honda Bikes
ஹோண்டா ஷைன் 125 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
harley x440 bike specs and on-road price
Harley-Davidson
ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440 பைக்கின் விலை, மைலேஜ், சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved