இந்திய சந்தையில் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அடுத்த காராக கார்னிவல் எம்பிவி ரக மாடல் 6, 7 மற்றும் 8 என மூன்று விதமான மாறுபட்ட இருக்கை ஆப்ஷனுடன் ரூ. 30 லட்சம் ஆரம்ப விலையில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சர்வதேச அளவில் கார்னிவல் அல்லது செடோனா என்ற பெயரில் 6, 7,8, 9 மற்றும் 11 இருக்கைகள் கொண்ட மாடலாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற இன்னோவா கிரிஸ்டா, பென்ஸ் வி கிளாஸ் மற்றும் டொயோட்டா வெல்ஃபயர் போன்ற மாடல்களுக்கு சவாலினை ஏற்படுத்த உள்ளது.
டாப் வேரியண்டுகளில் கால்களை நீட்டிக்கொள்ளும் வகையிலான லெக் ரெஸ்ட் மற்றும் ஆர்ம்ரெஸ்டுகளுடன் கேப்டன் இருக்கைகள், பின்புற இருக்கைகளுக்கு 10.1 அங்குல திரை பெற்ற பொழுதுபோக்கு அம்சம், கியாவின் UVO கனெக்ட்டிவிட்டி, அகலமான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இரண்டு சன்ரூஃப், 3 மண்டல ஏசி கட்டுப்பாடு இருக்கலாம். மிக சிறப்பான பாதுகாப்பு வசதிகளை பெற்றதாக விளங்க உள்ளது.
கியா கார்னிவல் காரில் பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான 2.2 லிட்டர், 4-சிலிண்டர், டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 202 பிஎஸ் பவர் மற்றும் 441 என்எம் டார்க் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கலாம்.
இந்தியாவில் கார்னிவல் கார் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. இந்த காரின் விலை ரூ.30 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) தொடங்கலாம்.
ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…
கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…
கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…
டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…