Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஸ்லோவாக்கியாவில் தயாரிப்பு தொழிற்சாலையை துவக்குகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர்

by automobiletamilan
October 29, 2018
in கார் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

பிரிட்டனை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தனது ஐந்தாவது தயாரிப்பு தொழிற்சாலையை பிரிட்டனுக்கு வெளியே அமைக்க உள்ளது. ஸ்லோவாக்கியாவில் அமைய உள்ள இந்த தொழிற்சாலைக்காக 9400 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.

டாட்டா மோட்டார்ஸ் கடந்த 2008 மற்றும் 2011ம் ஆண்டில் முதல் தொழிற்சாலையை பிரிட்டனுக்கு வெளியே இந்தியாவின் புனே நரகில் அமைத்தது. பின்னர் 2014ல் சீனாவிலும், அதை தொடர்ந்து 2016ல் பிரேசிலிலும், 2017ல் ஆஸ்திரேலியாவிலும் அமைத்து, சர்வதேச அளவில் தங்கள் தொழிற்சாலைகளை விரிவு படுத்தி கொண்டது.

புதிய தொழிற்சாலை உருவாக்குவதன் நோக்கமே, மூலம் சர்வேதச கரன்சிகளுக்கு ஏற்ற வகையில் தங்கள் தயாரிப்பு முறைகளை மாற்றி விரிவுபடுத்தி கொள்வதேயாகும். இந்த தொழிற்சாலை மூலம் 1500 உள்ளூர் மக்களும் வேலை வாய்ப்பு கிடைக்கும்., இதுமட்டுமின்றி மேலும் 800 மக்களை பணியில் அமர்த்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த தொழிற்சாலை 1.5 லட்சம் வாகனங்களை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலையில் குகா பிளஸ் கேரியர் சிஸ்டம் மற்றும் உயர்தரம் கொண்ட ஆட்டோமேட்டிக் பெயின்ட் ஷாப் போன்றவை இடம் பெற்றுள்ளன. மேலும் இதில் பெரும்பாலான பாகங்கள், சீட்கள் மற்றும் வீல் போன்ற உள்ளுரிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தயாரிப்பு செலவுகள் குறையும். இதுமட்டுமின்றி. நிறுவனம் சார்பில் சில வகையான சமூக மற்றும் சுற்றுச்சூழல் திட்டங்களையும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம், சுத்தமான மற்றும் பசுமையான எதிர்காலத்தை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நோக்கத்தை அடையும் நோக்கில், பல்வேறு எலெக்ட்ரிக் மற்றும் பிளக்-இன் ஹைபிரிட் வாகனங்களை வரும் 2020ம் ஆண்டு முதல் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

Tags: FacilityJaguar Land RoverOpens ManufacturingSlovakiaதயாரிப்புதுவக்குகிறதுதொழிற்சாலையைஜாகுவார் லேண்ட் ரோவர்ஸ்லோவாக்கியாவில்
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan