ஜீப் பிராண்டில் விற்பனைக்கு வரவுள்ள புதிய ஜீப் காம்பஸ் எஸ்யுவி காருக்கு முன்பதிவு தொடங்கப்பட்ட மூன்றே நாட்களில் 1000 முன்பதிவுகளை பெற்று அதிரடி சாதனையை தொடங்கியுள்ளது.

ஜீப் காம்பஸ் எஸ்யுவி

இந்தியாவிலிருந்து வலதுபக்க டிரைவிங் உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட  உள்ள ஜீப் காம்பஸ் எஸ்யுவி மாடலில் 160 ஹெச்பி ஆற்றலுடன் 350 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 170 ஹெச்பி பவருடன்,  260 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் மல்டிஏர் பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது.

இதில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக டூயல் கிளட்ச் கியராபாக்ஸ் இடம்பெற்றுள்ளது. 4×4 டிரைவ் , 4×2 டிரைவ் என இருவிதமான வகைகளில் கிடைக்க உள்ளது.

வேரியன்ட் விபரம்

Sport, Longitude, Longitude(O), Limited மற்றும் Limited(O) என 5 வகையான வேரியன்ட்களில் கிடைக்க பெற உள்ளது.

23 மாதங்களில் $280 மில்லியன் முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இராஞ்சகவுன் தொழிற்சாலையிலிருந்து ஜப்பான், இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ள ஜீப் காம்பஸ் எஸ்யூவி மாடலின் 80 சதவிகித பாகங்கள் உள்நாட்டிலே உற்பத்தி செய்யப்பட உள்ளதால் மிகவும் சவாலான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது.

வரும் ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாத தொடக்க காலங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ள காம்பஸ் எஸ்யூவி எக்ஸ்யூவி500, ஹூண்டாய் டூஸான், ஹோண்டா சிஆர்-வி போன்ற மாடல்களுக்குநேரடி போட்டியாகவும் , ஃபார்ச்சூனர், எண்டேவர், பஜரோ ஸ்போரட் போன்றவற்றுக்கு சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பல்வேறு யூக செய்திகளின் அடிப்படையில் காம்பஸ் எஸ்யூவி காரின் விலை ரூ.15 லட்சம் முதல் ரூ. 21 லட்சத்தில் அமையலாம் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

JEEP Compass Image Gallery