7 இருக்கை பெற்ற ஜீப் மெரிடியன் அப்லேண்ட் மற்றும் மெரிடியன் X என இரண்டு சிறப்பு கார் எடிசனை ₹ 33.41 லட்சம் முதல் ₹ 38.47 லட்சம் வரை விலையில் அறிமுகம் செய்துள்ளது. கூடுதலான சில வசதிகளை பெற்று மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை.

இரண்டு எஸ்யூவி கார்களும்  2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜினை பகிர்ந்து கொண்டு 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் உடன் அதிகபட்சமாக 168 hp பவரை வெளிப்படுத்துகின்றது. ஜீப் மெரிடியன் எக்ஸ் அல்லது மெரிடியன் அப்லேண்டில் வேறு எந்த மாற்றங்களும் இல்லை.

Jeep Meridian X, Meridan Upland

மெரிடியன் X காரில் ‘சில்வரி மூன்’ நிறத்தை பெற்று, மெரிடியன் அப்லேண்ட் ‘கேலக்ஸி ப்ளூ’ நிறத்தை கொண்டுள்ளது. இரண்டு மாடல்களிலும் தோற்றத்தில் சிறிய வேறுபாடுகள் உள்ளன மெரிடியன் X காரில் பாடி நிறத்திலான கிளாடிங் மற்றும் சைடு மோல்டிங்குகள், சாம்பல் நிற கூரை மற்றும் அலாய் வீல் ஆகியவற்றுடன் மற்ற அம்சங்களில் பக்கவாட்டு படிகள், படெல் விளக்குகள் மற்றும் ஆம்பியன்ட் உட்புற விளக்குகள் ஆகியவை அடங்கும்.

மெரிடியன் அப்லேண்ட் ஒரு தனித்துவமான பானட் ஸ்டிக்கரிங் கொண்டுள்ளது, மேலும் ஸ்பிளாஸ் கார்டுகள், பூட் ஆர்கனைசர், சன் ஷேட்கள், கார்கோ பாய்கள், டயர் இன்ஃப்ளேட்டர் உள்ளிட்ட வசதியுடன் கூரை ரேக் மற்றும் பக்கவாட்டு படிகளுடன் பொருத்தப்பட்டுள்ளது.